வெளிநாடு சென்றுள்ள அமைச்சர்கள் உடனே நாடு திரும்ப உத்தரவு

najநாட்டில்  வெள்ளப்  பெருக்கு  மோசமான  வேளையில்  அமெரிக்காவில்  விடுமுறையைக்  கழித்துக்  கொண்டிருந்ததற்காகக்  கடுமையான  குறைகூறலுக்கு  ஆளான  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  விடுமுறையைக்  கழிப்பதற்கு  வெளிநாடு  சென்றுள்ள  எல்லா  அமைச்சர்களையும் உடனே  நாடு  திரும்புமாறு  பணித்துள்ளார்.

நஜிப்,  இன்று  காலை  அவ்வுத்தரவைப்  பிறப்பித்ததாக  பெர்னாமா  கூறியது. உத்தரவு  கிடைக்கப்பெற்ற  அமைச்சர்கள்  நாடு  திரும்ப  ஆயத்தம்  செய்து  கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“அவர்கள்  இங்கிருந்தால்  வெள்ள  மீட்பு  மற்றும் துயர்த்துடைப்புப்  பணிகளிலும்  உதவ  முடியும்”,என  நஜிப்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

அவர்  இன்று   பகாங்கில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  இடங்களைப் பார்வையிட்டார்.