வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. பெர்னாமா செய்திப்படி இன்று பிற்பகல்வரை ஆறு மாநிலங்களில் மொத்தம் 168,660 பேர் துயர்த்துடைப்பு மையங்களில் தங்கியிருந்தனர்.
கிளந்தான், பகாங், ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்களில் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. திரெங்கானுவிலும் பெர்லிசிலும் நேற்றிரவு இருந்ததைவிட இன்று நிலைமை ஓரளவு மேம்பட்டிருந்தது.
நெகிரி செம்பிலானிலும் கெடாவிலும் துயர்த்துடைப்பு மையங்களிலிருந்த அனைவரும் வீடு திரும்பி விட்டனர். ஆனால், சிலாங்கூர், கிள்ளானில் புதிதாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு மன்றம் அறிவித்துள்ளது.
கிளந்தானில், மாநில வெள்ள ஒருங்கிணைப்பாளரான அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா முகம்மட், உணவுக்குப் பிரச்னையில்லை என்றார். ஆனால், உணவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் பெரும் பிரச்னையாக உள்ளது. சில பகுதிகளுக்குச் செல்ல முடிவதில்லையாம்.
“மாநிலத்தில் தடைப்பட்ட மின்சார விநியோகம் இன்னும் திரும்பக் கிடைக்கவில்லை. மெழுகுதிரிகளும் விற்று முடிந்தன”, என்றவர் கோத்தா பாருவில் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டே இருப்பதாகவும் தெரிவித்தார்..
“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, சோதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது இந்த பூமி”!
இது மேலும் அதிகமாக வாய்ப்புண்டு காரணம் நாட்டிலே முதலாவதாக இருப்பவனும் இரண்டவ்பதாக இருப்பவனும் மக்களை சுரண்டி சுயனலதிக்கு பொது சொத்தை பயன்படுத்துவதால் இந்த இருவரும் உடனே ராஜினாமா செய்தல் நாடு மத பிரச்சனயிளிரிந்து வெளிப்படும் நாடு நல்லா இருக்க மூவர் செத்தால் நலம்