இந்தோனேசியா, சுரபாயாவிலிருந்து இன்று காலையில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர்ஆசியா விமானம் காணாமல் போய்விட்ட சம்பவத்தை தமக்கு ஏற்பட்ட மிக மோசமான கடுந்துயரம் என்று அவ்விமான நிறுவன குழுமத்தின் செயல்முறை தலைவர் டோனி பெர்னேண்டஸ் கூறினார்.
இக்குழுமத்தின் தலைவர் என்ற முறையில் இச்சோதனையான நேரத்தில் தாம் அங்கே இருக்கப்போவதாக அவர் கூறினார்.
“பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்களைக் கவனித்துக்கொள்வது எங்களது தலையாய கடமையாகும்”, என்று டோனி மேலும் கூறினார்.
காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி இன்றிரவு மணி 7.30 அளவில் முடித்துக்கொள்ளப்பட்டது.
தேடும் பணி மீண்டும் நாளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. விமானம் தேடப்படும் பகுதியில் மோசமாக இருந்த வானிலை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் தேடும் பணி பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காணாமல் போன ஏர்ஆசியா பயணம் QZ8501 பயணித்த 155 பயணிகளில் ஒரே ஒருவர் மட்டும் மலேசியர். அவர் சீ சுங் ஹூய் என்ற சரவாக்கியர் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் மொத்தம் 162 பேர் இருந்தனர். அவர்களில் இந்தோனேசியர்கள் (இரு விமான பணியாளர்கள் உட்பட) 156 பேர், தென்கொரியர்கள் 3, சிங்கப்பூரர் 1, ஃபிரன்ச்சுக்காரர் 1 மற்றும் மலேசியர் 1.
இச்சம்பவம் குறித்து பயணிகளின் உறவினர்களுக்கு தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை மலேசிய, சிங்கப்பூர் பிரதமர்களும் இந்தோனேசிய அதிபரும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் தங்களால் ஆன அனைத்தையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
என் ஆழ்ந்த அனுதாபங்கள்
ஐயா, இது ஒரு கடுமையான துயரம் தான். ஆனாலும் அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக திரும்ப வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் வேண்டுதலுமாகும்.. பிரார்த்திப்போம்.
விபத்து என்றாலும் விமான உருவகம் நிலைத்திருந்தால் உயிர் சேதம் குறையலாம். எல்லாம் அவன் செயல்.
நல்ல செய்தி வரும் என்று காத்திருப்போம் .
தங்கள் வானில் பறந்து கொண்டிருக்கும் அனைத்து விமானங்களின் பாதுகாப்புக்கு அந்த அந்த நாடுகள்தான் பொறுபேற்க வேண்டும்.அதுபோல் QZ8501 விமானத்தின் சரியான (route)தில் வான்நிலை கனத்தை கருத்தில் கொண்டு அதற்கு சரியான பாதையை கொடுக்க தவறிய இந்தோனேசியாதான் பொறுபேற்க வேண்டும்.விமானி கடைசி நேரத்தில் வேறு பாதையை கேட்டதற்கு இது முக்கிய கரணம்.
எதிர்பாராமல் நிழந்து விட்ட துயரமான செய்தி வருந்துகிறேன்!
மாட்டி கொண்டது நம் விமானம் என்று வைத்துகொண்டாலும் – இதற்கு பதில் சொல்ல வேண்டியது இந்தோனீசியா என்பதே நியாயமாகும்…
திடம் கருப்பு இனத்தவனின் மனம் அதை தாங்கள் சற்றும் தளரவிடகூடாது
ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்…!