எஸ்ஏஆர் தலைவர்: விமானம் கடலில் விழுந்திருக்கலாம்

sar155 பயணிகளையும்  ஏழு பணியாளர்களையும்  ஏற்றிக்கொண்டு  இந்தோனேசியாவின்  சுராபாயாவிலிருந்து  சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்த  ஏர் ஏசியா விமானம் நேற்று காணாமல்  போனது.

அந்த  ஏர்பஸ்  விமானம், உள்ளூர்  நேரப்படி  காலை  5.20-க்கு (மலேசிய  நேரம்  6.20), ஜாவாவின்  சுராபாயாவிலிருந்து  புறப்பட்டு  இரண்டு  மணி  நேரத்தில்  சிங்கப்பூர்  சென்றிருக்க  வேண்டும். ஆனால், இடையில்  அதனுடன் தொடர்புகள்  அறுந்துபோனதாக  ஜகார்த்தா சிவில்  விமான கட்டுப்பாட்டு நிலையம் கூறியது.

இந்தோனேசிய  அதிகாரிகள்  நேற்று  தேடல்  மற்றும்  மீட்பு (எஸ்ஏஆர்)  நடவடிக்கையைத்  தொடங்கினர்.  இதுவரை  பலனில்லை.  அது  சுமத்ராவை  அடுத்துள்ள  பெலிதுயிங்  தீவுக்கு  அருகில்  விழுந்து  நொறுங்கியிருக்கலாம்  என்று  சில  செய்திகள்  கூறின. ஆனால், அதை உறுதிப்படுத்திக்கொள்ள  ஆதாரங்கள்  இல்லை.

இதனிடையே இந்தோனேசியாவின்  எஸ்ஏஆர்  தலைவர்  பம்பாங்  சோயில்ஸ்ட்யோ  ஏர் ஏசியா விமானம்  QZ8501  “கடலடியில்  கிடக்கலாம்” என்று  கூறியதாக  ஏஎப்பி  செய்தி  நிறுவனம்  தெரிவித்தது.

இதுவரை  திரட்டப்பட்ட  தடயங்களின்  அடிப்படையில்  இப்படியோர்  அனுமானத்துக்கு வந்ததாக பம்பாங்  கூறினாராம்.