‘அரிசிப் பைகளில் என் முகத்தை அச்சிட வேண்டியிருந்ததால் உதவி தாமதமானதாக சொல்வது சரியல்ல’

lanவெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்குக்  கொடுக்கப்பட்ட   தம்  முகம்  பதிக்கப்பட்ட  அரிசிப்  பைகள், 13வது  பொதுத்  தேர்தல்  பரப்புரைகளில்  கொடுக்கப்பட்டவை  போக  மீதமிருந்தவை  என  மாச்சாங  எம்பி  ஜஸ்லான்  யாக்கூப்  கூறுகிறார்.

அப்பைகளில்  தம்  முகத்தையும்  பிஎன் என்பதையும்   அச்சடிக்க  முனைந்ததால்தான்  வெள்ள  உதவிப்  பொருள்கள்  கொடுப்பது  தாமதமானது  என்று  குற்றம் சாட்டுவோருக்கு அவர் இவ்வாறு  பதிலளித்துள்ளார்.

“அவதூறு  செய்யும்  பாவம்  கொலையினும்  கொடியது. மறுமையில்  இறைவனுக்குப்  பதில் சொல்ல  வேண்டியிருக்கும். இஸ்லாமியக் கட்சி  என்று  கூறிக்கொள்கிறார்கள். ஆனால், இஸ்லாத்தைப் பின்பற்றுவதில்லை”, என  அஹ்மட்  ஜஸ்லான்  தம்  முகநூல்  பக்கத்தில்  கூறியிருந்தார்.

“பேரிடர்  தாக்கிய  வேளை  உதவிப்பொருள்களுக்குப்  பற்றாக்குறை  ஏற்பட்டதால்  என்  கையிருப்பிலிருந்து  500  பைகளை  எடுத்துக்  கொடுத்தேன்.

“இது  மனிதாபிமானத்துடன்  செய்யப்பட்டது. அரசியலுக்கு  இது  நேரமல்ல”, என்றவர்  வலியுறுத்தினார்.