இன்று, திங்கள்கிழமை, ஏர் ஏசியா பங்குகள் 7.8 விழுக்காடு வீழ்ச்சி கண்டன. நேற்று, ஏர் ஏசியா விமானம் ஒன்று ஜாவா, சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் வழியில் காணாமல்போனதை அடுத்து ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது கடந்த மூன்றாண்டுகளில் அப்பங்குகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஒருநாள் வீழ்ச்சியாகும்.
அச்சம்பவத்தால் பயணிகள் அந்நிறுவனத்தின் விமானங்களில் பயணம் செய்வதற்குத் தயக்கக் காட்டலாம் என்பதால் வருமாண்டில் அதன் ஆதாயம் பாதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
“2015-இல் அதன் ஆதாயம் குறைந்தபட்சம் நிலையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், இப்போது ஐந்து விழுக்காடு குறையலாம் என நினைக்கிறேன்”, என்று கோலாலும்பூரில் ஹொங் லியோங் முதலீட்டு வங்கியின் ஆய்வாளர் டேனியல் வொங் கூறினார்.
ஏர் ஆசியாவிற்கும் சோதனையா ,என்ன செய்வது ஆவதும் அவனாலே அழிவதும் அவனாலே .
இது தற்காலிகமே.
எனக்கு இப்பொழுது malindo மேல் தீராத சந்தேகம் வலுக்கிறது .mas மேலேயும் சந்தேகம் வருகிறது போட்டி இருக்கலாம் ஆனால் உங்கள் நாட்டின் விமானங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது என்று புரியாத பபுதிராக உள்ளது
நம் தேங்காய் மந்திரவாதி எங்கே போனார் !!!!!!!!!!!!!