மலாய் ஆலோசனை மன்றம் (எம்பிஎம்) ‘மலாய்ச் சான்றோர்’ 25 பேருடன் இரகசியக் கூட்டம் நடத்தும் என அதன் தலைமைச் செயலாளர் ஹசன் மாட் அறிவித்துள்ளார்
கூட்டம் எப்போது என்பதை அவரால் தெரிவிக்க இயலவில்லை. ‘சான்றோர் 25’ பேரிடமிருந்து பொருத்தமான தேதி கிடைக்கவில்லை என்றாரவர்.
அவர்களைச் சந்திக்கும்படி பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதை அடுத்து எம்பிஎம் இக்கூட்டத்துக்குத் திட்டமிட்டிருக்கிறது.
கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.
“அவர்களைச் சந்திப்பதற்குமுன் அதைத் தெரிவிக்க முடியாது.
“பிரதமர் அலுவலகம்தான் சந்திக்கச் சொன்னது. அவர்களின் பிரதிநிதியாகத்தான் இச்சந்திப்பில் கலந்துகொள்கிறோம்”, என்றும் ஹசன் செய்தியாளர்களிடம் கூறினார்.


























நல்ல முன்னேற்றம். பெருவாரியான மலாய்க்காரர்களின் எண்ணங்களை வேலையில் கொணர இக்குழு ஒரு நல்ல ஆரம்பமாகும்.
இந்த நாட்டில் இன ஒற்றுமையை முதலில் உருவாக்கட்டும்