வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் 5,000 ஆயுதப்படையினர் ஈடுபட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.
அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்திக்கவும் அவர்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கவும் இன்று கிளந்தானுக்கு வருகை புரிந்தார் என பெர்னாமா கூறியது.
கிளந்தானில் உள்ள மலேசியாகினி குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான உணவு கிடைப்பதுதான் பெரும் பிரச்னையாக இருக்கிறதெனக் கூறுகிறது.
மின்சாரமும் எரிபொருளும் இல்லாததால் உணவைச் சமைத்துச் சாப்பிட முடிவதில்லை. பெரும்பாலும் பிஸ்கட்டுகளைச் சாப்பிடுகிறார்கள். நூடல்ஸ்கள் சாப்பிடுவதாக இருந்தால் மழைநீரில் நனைத்துத்தான் சாப்பிட வேண்டியுள்ளது.
இதற்கு அரசியல் பிரமுகர்கள்கூட விதிவிலக்கல்ல. முன்னாள் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்டின் அரசியல் செயலாளராக இருந்த அன்னுவால் பக்ரி ஹருன் இப்படித்தான் சாப்பிட்டு வருகிறார்.
வானிலை ஆய்வுத் துறை இப்போதைய பருவ மழை டிசம்பர் 31, புதன்கிழமைவரை நீடிக்கலாம் என ஆருடம் கூறியுள்ளது.
இன்னும் இருக்காம் பிரளயம் பஹாங்கில் வர வாய்பு நிறைய இருக்கிறது என்று வெளி நாட்டு weather forecast ஆங்கிலத்தில் செய்தி சமர்பித்தது