பாஸ்: பட்ஜெட்டில் வெள்ள நிர்வாகத்துக்கு ரிம9.3மில்லியன் மட்டுமே

budget2015  பட்ஜெட்டில்  இயற்கைப்  பேரிடர்களுக்கு  ரிம9.3 மில்லியன்  மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது  பேரிடர்  நிவாரணத்துக்கு  முன்னுரிமை  கொடுக்கப்படவில்லை  என்பதற்குத்  தக்க  சான்று  என்று  பாஸ்  தலைவர்  ஒருவர்  கூறியுள்ளார்.

பெர்மாத்தா  திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையுடன்  ஒப்பிட்டால்  இது  அற்பத்  தொகை  என்று  பாஸ்  உதவித்  தலைவர்  சலாஹுடின்  ஆயுப்  கூறினார்.

“இயற்கைப் பேரிடர்  நிர்வாகத்துக்கு ஒதுக்கப்பட்டது ரிம9.3 மில்லியன், பெர்மாத்தாவுக்கு  ரிம711 மில்லியன்”, என்றவர் செய்தியாளர்  கூட்டமொன்றில்  கூறினார்.

இவ்வாறு  கூறுவதை  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  ஏற்கனவே  மறுத்து  ரிம711 மில்லியனில்  அவ்வளவும்  பெர்மாத்தாவுக்கு  அல்ல  என்றும்  அதில்  ஒரு  பகுதி  மட்டுமே  என்றும் விளக்கியுள்ளார்.

இந்த ரிம711 மில்லியன்  பெர்மாத்தாவுக்கும் கல்வி  அமைச்சுக்கும்   கெமாஸ்  பாலர் பள்ளிகளுக்கும்  பெர்பாடுவான்  பாலர் பள்ளிகளுக்கும்  பகிர்ந்தளிக்கப்படுவதாகக் மஸ்லான்  கூறினார்.  2015-இல் இதிலிருந்து  பெர்மாத்தா  பெறப்போவது ரிம30,690,000 மட்டுமே.