நேற்றிரவு கிளந்தானிலும் திரெங்கானுவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த வேளையில் பகாங்கில் அவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட தகவலின்படி இப்போது வெள்ள அகதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 250,000.
கிளந்தானில்- 158,476
பகாங்கில்- 49,369
திரெங்கானுவில்- 31,477
பேராக்கில் – 7,611
ஜோகூரில் – 171. ஆக மொத்தம் 247,104 பேர் துயர்த்துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
இதனிடையே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க கிளந்தான் செல்வதாக பெர்னாமா தகவலொன்று தெரிவிக்கிறது.
ஆண்டு இறுதியில் அடை மழைப் பெய்வதும் அதைத் தொடர்ந்து வெள்ளம் வருவதும் காலம் காலமாக நடப்பதுதான். எனவே மந்திரிகளும் அரசாங்க உயர் அதிகாரிகளும் ‘ஆண்டு இறுதி’ விடுமுறையில் போனது கண்டிக்கத்தக்கது. அதிலும் ‘வெளிநாட்டுக்கு’ விடுமுறையில் போவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இங்கேயே இருந்திருதால் வெள்ள அகதிகளுக்கு பலவழிகளில் உதவியிருக்க முடியும். அதிலும் ‘விடுமுறையிலிருந்து நாட்டுக்கு திரும்ப வாருங்கள்’ என்று பிரதமர் சொல்லும் முன்பே அவர்கள் வந்திருக்க வேண்டாமா? அது சரி, எப்படி வருவார்கள். அவரே பலரும் கா_ து_பிய பின்னர் தானே வந்தார்? தலை எப்படியோ ‘குடிகளும்’ அப்படியே. இனி வரும் காலங்களில் மந்திரிகளும் அரசாங்க உயர் அதிகாரிகளும் ஆண்டு இறுதியில் விடுமுறையில் போக அனுமதிக்கக் கூடாது. அது மட்டும் அல்ல. பிரதமர் உள்ளிட்ட அனைத்து மந்திரிகளும் துணை மந்திரிகளும் ஆண்டு விடுமுறையில் போவதை குறைந்தது 15 நாட்களுக்கு முன் பத்திரிக்கை வழி மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். அது போலவே நாடாளுமன்ற, சட்டமன்ற உருப்பினர்களும் விடுமுறையில் போவதை அந்தந்த தொகுதி மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.