விமானத்தைத் தேடும்பணி தொடர்கிறது

path 155 பயணிகளையும்  ஏழு பணியாளர்களையும்  ஏற்றிக்கொண்டு  இந்தோனேசியாவின்  சுராபாயாவிலிருந்து  சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தபோது  காணாமல்போன  ஏர் ஏசியா விமானம் பற்றி  இதுவரை  தகவல்  ஏதும்  இல்லை.

அதைத் தேடும்பணி  மும்முரமாக  நடந்துகொண்டிருக்கிறது.  தேடும் பணியில்  உதவ  அமெரிக்காவும் ஒரு  கப்பலை  அனுப்பி  வைத்துள்ளது. யுஎஸ்எஸ்  செம்ப்சன்  என்னும்  அந்த  நாசகாரி இன்று  பின்னேரம்  வந்து  சேரும்  என  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசிய  அரசாங்கம்  கேட்டுக்கொண்டதற்கிணங்க  அக்கப்பல்  அனுப்பி  வைக்கப்படுவதாக அமெரிக்க பசிபிக்  தளபத்யம், ஜப்பானின், யோகோசுக்காவில் வெளியிட்ட  அறிக்கை ஒன்று  தெரிவித்தது.

இதனிடையே, விமானம்  விழுந்திருக்கலாம்  என்று  நம்பப்படும்  இடம்  13  பகுதிகளாக  பிரிக்கப்பட்டு  நிலத்திலும்  நீரிலும்  தேடும்பணி  தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக  இந்தோனேசிய  அதிகாரிகள்  அறிவித்துள்ளனர்.

மலேசியாவின்  கடற்படை  கலமான  கேடி லெகிரும்  தேடும்பணியில்  சேர்ந்து  கொண்டிருப்பதாக. மலேசியக் கடற்படை  தலைவர்  அப்துல்  அசீஸ்  ஜப்பார் தெரிவித்தார்.