இன்று காலை கேமரன் மலையில் ஏற்பட்ட நிலச் சரிவில் ஒரு கர்ப்பவதியும் அவரது ஒரு வயது மகனும் கொல்லப்பட்டனர். அவரின் கணவருக்குக் கால் முறிந்தது.
காலை மணி 5.30க்கு, எம். நித்யவதி(24)யும் அவரின் மகன் ஆர். ரூபனீஸ்வரனும் அவர்களின் வீட்டுக்குப் பின்புறம் ஏற்பட்ட நிலச் சரிவில் புதையுண்டு போனதாக கேமரன் மலை போலீஸ் தலைவர் டிஎஸ்பி வான் ஜஹாரி வான் புசு கூறினார்.
நெஞ்சுவரை நிலச் சரிவில் புதையுண்டு கிடந்த நித்யவதியின் கணவர் வி.ராஜாவைத் தீ அணைப்பு, மீட்புப் படையினர் காப்பாற்றினர். ஆனால், அவரது கால் முறிந்து விட்டது.
இந்த அரசாங்கத்தின் லட்சணத்தை கேளுங்கள். பாதிக்கப்பட்ட மூவரும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் வீட்டு அருகில் மற்றொரு வீடு உள்ளது. இரண்டு குழந்தைகளுடன் வேறொரு இந்திய குடும்பம் அது. தெய்வாதீனமாக உயிர் தப்பியது. மண்சரிவு ஏற்பட்ட அந்த இடம் ஓர் சீனருக்கு சொந்தமானது. பட்டா இல்லாதது என்பதால், மாவட்ட அலுவலகம் அந்த இந்திய குடும்பத்தை அணுகி உடனே அவ்விடத்தை காலி செய்யச் சொன்னது. நாங்கள் எங்கே போவது? ஏதாவது ஓர் இடத்தை பார்த்து கொடுங்கள் என கெஞ்சினர். வேறு இடம் கிடைக்கிறதோ இல்லையோ,இன்று இரவுக்குள் இவ்விடத்தை விட்டு வெளியேறாவிட்டால் உங்கள் பொருட்கள் அவ்வளவையும் தூக்கி வெளியே வைத்து விடுவோம், என்று கூறி சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்ட அக்குடும்பத்திற்கு ஓர் இடத்தை அடையாளம் காட்ட இந்த அரசால் முடியவில்லை. அரசாங்கம் மக்களை காக்கும் லட்சணம் இதுதானா?
ஆட்சேபனை இல்லையென்றால், வேறு இடம் கிடைக்கும் வரை என் வீட்டில் வந்து குடியிருங்கள் எனக் கூறியுள்ளேன். கேமரன் மலையில் எந்நேரத்தில், எவ்விடத்தில் என்ன நடக்கும், எங்கெங்கே மண் சரியும், என கூற முடியாத நிலை.
மாலை ஆறு மணி நிலவரம். கேமரன் மலையின் கம்போங் ராஜா அருகில், தாமான் தேச கோரினா என்னுமிடத்தில் பயங்கர நிலச்சரிவு. வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப் படுகிறது. எட்டு மணி வரையில் ஒரு சடலத்தை வெளியே இழுத்துவிட்டோம்.
நாட்டின் umno தலைவர்கள் செய்யும் அட்டுழியம் ஆணவம் தாங்கது பூமா தேவி தாங்க முடியாமல் தவிப்பதால் பல ஆசாம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்
ஐயா சிம்மாதிரி, என்னய்யா இது மேலும் வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றியது போல இருக்கு!. சிவ, சிவ. இறைவா எங்களை மேலும் துன்புறுத்தாமல், நாட்டை ஆள்பவர்களுக்கு நல்வழியைக் காட்டப்பா.
இந்த நிலச்சரிவுகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணம், கேமரன் மலை காடுகள் ஒழிக்கப்பட்டதுதான். இந்த காடழிப்புக்கு தான் எவ்வித ‘மஞ்சள் கடிதமும்’ கொடுக்கவில்லை என மாநில சுல்தான் ஆணித்தரமாக கூறியுள்ளார். இக்காடழிப்புக்கு விவசாயிகளிடமிருந்து தாம் எவ்வித லஞ்சத்தையும் பெற்றதில்லை என மாநில மந்திரி புசார் கூறுகிறார். அப்படிஎன்றால் கேமரன் மலை எப்படி சீரழிந்தது.? கேமரன் மலை சீரழிந்ததில் சம்பத்தப்பட்டவர்கள் யாராயிருப்பினும் நாங்கள் சும்மா விடமாட்டோம் என ஊழல் புகார் ஆணையம் வீராப்பு பேசுகிறது. அப்படியானால், இந்த காடழிப்பு ஊழலில் மந்திரி புசார் சம்பந்தப்பட்டுள்ளார் என மூன்றாண்டுகளுக்கு முன்னர் நான் செய்த போலீஸ் புகார் என்னவாயிற்று.?
ஓட்டு கண்டிப்பா பாரிசானுக்கு தான் போடணும் அப்பத்தான் நமக்கு நல்லது நடக்கும்
சங்கரர் உன்னை போல …. ஜென்மம் உலகில் இல்லை எனலாம் ஏண்டா புளுபூத அரிசிக்கும் பருப்புக்கும் சம்சுவக்கும் நாக்கு தொங்க போட்டு அலையற