தாங்கள் முன்வைத்த விவகாரங்கள் தொடர்பில் பிரதமரை மட்டுமே சந்திக்க விரும்பும் ‘சான்றோர் 25’ குழுவினர், மலாய் ஆலோசனை மன்றம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் சொன்னார்கள்.
“பிரதமரை மட்டுமே சந்திக்க விரும்புகிறோம். வேறு யாரையும் அல்ல”, என முன்னாள் அரசதந்திரிகளான கமில் ஜாப்பாரும் நூர் பரிடா அரிப்பினும் இன்று தெரிவித்தனர்.
மலாய்ப் பெருமக்களான அந்த 25 பேரையும் சந்திக்குமாறு பிரதமர் அலுவலகம் தங்களைப் பணித்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் மலாய் ஆலோசனை மன்றம்(எம்சிசி) பற்றி அவர்களிடம் வினவியதற்கு, “மலாய் ஆலோசனை மன்றமா, அப்படியென்றால் என்ன?”, என்றும் வினவினர்.
“எம்சிசி பற்றியோ அதில் இருப்பவர்களைப் பற்றியோ கேள்விப்பட்டதே இல்லை, யார் அவர்கள்?”, என நூர் பரிடா கேட்டார்.
உங்களின் உறுதியும் தெளிவும் தொடர்வதற்கு எமது வாழ்த்துக்கள்.
இவனை சந்தித்து என்ன நடக்கபோகின்றது? எல்லாமே இவனின் ஆசியுடன் தானே நடக்கின்றது– பதவியில் எப்போதும் உட்கார்ந்து இருக்கவே தானே எல்லாமே நடக்கின்றது. வீண் முயற்ச்சி.
நன்று! நன்று! நல்லதை செய்வதற்கு இடைத்தரகர்கள் எதற்கு? குட்டையைக் குழப்பவா!
தெரு வில் அலையும் குறைக்கும் ஓசை எழுப்பும் பிராணியை பார்ப்பது உங்களுக்கு மேலும் நன்மை பயக்கும் இவனை பார்ப்பதைவிட