ஏர் ஏசியா விபத்து: 40 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

 

Airகடந்த ஞாயிற்ருக்கிழமை சுரபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் விபத்திற்குள்ளாகியது.

அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய கடற்படை இன்று மாலை மணி 6.30 வரையில் 40 சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவித்தது.

தேடும் பணி வெளிச்சம் குறைந்து இருள் சூழத் தொடங்கிவிட்டதால் நிறுத்தப்படுவதாகவும் நாளை மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்குள்ளான அந்த ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகளும் 7 விமானப் பணியாளர்களும் இருந்தனர்.