“40 சடலங்கள்” என்பது தவறு, ஜாக்கர்த்தா கூறுகிறது

 

Airசுரபாயா-சிங்கப்பூர் பயணத்தின் போது விபத்திற்குள்ளான ஏர்ஏசியா பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் ஆகியோரை தேடும் நடவடிக்கையின் போது 40 சடலங்கள் இந்தோனேசிய கடற்படைக் கப்பல் பங் தோமோவால் மீட்கப்பட்டதாக முன்னதாக வெளியிடப்பட்ட செய்தி கூறிற்று.

அத்தகவல் தவறானது என்று இந்தோனேசியாவின் தேடி மீட்கும் அமைப்பான சாரின் தலைவர் பாம்பாங் சோலிஸ்ட்யோ இன்று பின்னேரத்தில் தெரிவித்தார்.

மீட்கப்பட்டது மூவரின் சடலங்கள்தான் – இருவர் ஆண்கள், ஒருவர் பெண் – என்று பாம்பாங் மேலும் கூறினார் என்று சேனல் நியூஸ் ஏஜென்சி டிவி நிலையம் தெரிவித்தது.

தவறான தகவல் அளிக்கப்பட்டதற்கு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கோளாறுதான் என்று அவர் கூறினார்.