சாபாவின் வடக்குப் பகுதியை நோக்கிச் சீறிப் பாய்ந்துவந்த வெப்ப மண்டல புயல் ஒன்று சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்குக் கரை மாநிலங்களைத் தாக்கும் என அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பாதை விலகிச் சென்று விட்டது.
மணிக்கு 74 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் தெற்கு பிலிப்பீன்சைத் தாண்டி வந்த ‘ஜாங்மி’ புயல், சூலு கடலில் நுழைந்ததும் மணிக்கு 46 கிலோமீட்டர் என வேகம் குறைந்தது.
நாளை அது சண்டாகானுக்கு 300கிமீ வடகிழக்கே கலைந்து விடும் என வானிலை முன்னறிவிப்பு ஒன்று கூறுகிறது.
அது வேகம் குறையாமல் வந்திருந்தால் சாபா, லாபுவான், சரவாக் ஆகியவற்றுக்கு அப்பால் 4.5மீட்டருக்குப் பேரலைகளை உருவாக்கி மீன்பிடிப்பு, பயணப்படகுச் சேவை, கப்பல் போக்குவரத்து முதலிய நடவடிக்கைகளுக்குப் பேரபாயத்தை ஏற்படுத்தி இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை கூறிற்று.
ஏதொ நல்ல மலாய் சீன இந்திய இனத்தவர்கள் வாழ்வதால் இறைவன் அவர்கள் பிரார்த்தனை ஏற்று வேறு பக்கமாக திருப்பிவிட்டார் .நாட்டிலே ஒரு தலைவன் சொல்றான் அவன்தான் மக்களுக்கு சாப்பாடு போடறானாம் இறைவன் இல்லையாம் . ஒரு நாள் அவனுக்கு தெரியவரும் யார் பெரியவனென்று