கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் ஏசியா QZ8501 விமானத்திலிருந்து இதுவரை ஏழு சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டிருப்பதாக தேடல், மீட்புக் குழுத் தலைவரை மேற்கோள்காட்டி சிங்கப்பூரின் சேனல் நியுஸ் ஏசியா அறிவித்துள்ளது.
ஒரு சடலம் விமானப் பணியாளருடையது என்று தெரிவிக்கப்பட்டது. இன்னொரு சடலம், நீரில் மூழ்காமல் மிதக்க வைக்கும் காப்புச் சட்டை அணிந்திருந்தது.
சோனார் கருவி மூலம் எடுக்கப்பட்ட படமொன்று கடலடியில் கரிய பொருள் ஒன்று கிடப்பதைக் காண்பித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
“அது 30-இலிருந்து 50 மீட்டர் நீளம் கொண்ட பொருள்”,என இந்தோனேசியாவின் தேடல், மீட்பு மையம்(எஸ்ஏஆர்) தெரிவித்தது.
சடலங்கள் மீட்பதற்கு 47 முக்குளிப்பாளர்கள் ஆயத்தமாகக் காத்திருக்கிறார்கள். ஆனால், கடல் கொந்தளிப்பாக இருப்பதாலும் வானிலை மோசமாக இருப்பதாலும் சடலங்களைத் தேடி எடுப்பது சிரமமாக உள்ளது.
இதனிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடி எடுப்பதற்கு உதவ பிரிட்டன், சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வல்லுனர்களை அனுப்புகின்றன. ஏர்பஸ் நிறுவனமும் அதன் வல்லுனர்களை அனுப்பியுள்ளது.
நம்ம BN கட்சிக்காரனை தொடர்பு கொண்டு அந்த பைனாகுலர் BOMOH வை வைத்து கண்டுபிடித்துவிடலாமே ஏன் இவ்வளவு தாமதம்