கிளந்தான் மாநிலத்தில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குக் கட்டுப்பாடின்றி மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதுதான் காரணம் என்பதை கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப் நிராகரித்தார்.
வெள்ளம் பெருகக் கவனக் குறைவு காரணமாக இருக்கலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உள்பட, பல தரப்புகள் குறைகூறியுள்ளன.
ஆனால், அஹ்மட், தம் நிர்வாகம் விதிமுறைகளுக்கு ஏற்பவே வெட்டுமர நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கி வந்திருப்பதாகக் கூறினார்.
சந்தேகப்படுவோர் மாநில அரசிடம் பேசி சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளலாம் என்றாரவர்.
வெட்டுமர நடவடிக்கைகளே காரணம் என்று விரல்நீட்டிக் குற்றம் சொல்வதற்குமுன், “மிதமிஞ்சி மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வுத் துறை அறிவித்திருப்பதையும் கருத்தில் கொள்வது நல்லது”, என்றாரவர்.
நான் சொல்கிறேன் சுரண்டல் அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை golf விளையாட பயன்படுத்துவதால் ஏற்படுகிறது அதுவே உண்மை
ஹுடுட் சட்டத்தால் மட்டுமே வெள்ளத்தை தடுக்க முடியும்.