பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு 11-வது மலேசிய திட்டம் முன்னுரிமை அளிக்கும் என திரெங்கானு, கெமமானில் கூறினார்..
அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க திரெங்கானு சென்றிருப்பதாக பெர்னாமா கூறியது.
கிளந்தானில் டிசம்பர் 26-க்கும் 29-க்குமிடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த வேளையில் பேரங்காடிகளில் சூறையாடிய 99 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.
அவர்கள் ஒரு வாரகாலம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மாநில போலீஸ் தலைவர் மஸ்லான் லாசிம் தெரிவித்தார்.
வீடுகளையும் வர்த்தக மையங்களையும் போலீசார் பாதுகாத்து வருவதாக அவர் சொன்னார்.
இதனிடையே, தேசிய பாதுகாப்பு மன்றம், வெள்ள அகதிகளின் எண்ணிக்கை 180,757- இலிருந்து 147,809 ஆகக் குறைந்தது என அறிவித்துள்ளது.
மலேசியாகினியின் கணக்கெடுப்பில், கிளந்தானிலும் பகாங்கிலும் ஆயிரக்கணக்கானோர் துயர்த்துடைப்பு மையங்களை விட்டு வெளியேறியிருப்பது தெரிய வந்தது. பேராக்கிலும் பலர் வீடு திரும்பியுள்ளனர். திரெங்கானுவில் எந்த மாற்றமும் இல்லை. ஜோகூரில் வெள்ள அகதிகளின் எண்ணிக்கை சிறிது கூடியது.
பேராக் டிஏபி தலைவர் ங்கா கொர் மிங், அவரது ஒருமாத எம்பி சம்பளத்தை கட்சியின் வெள்ள உதவிநிதிக்குக் கொடையாக வழங்கியுள்ளார் என டிஏபி கட்சி ஏடான ராக்கெட்கினி கூறியது.
ங்கா, தைப்பிங் எம்பி ஆவார். இது தவிர பேராக் டிஏபி வெள்ள உதவிநிதிக்கு மேலும் ரிம10,000 திரட்டியுள்ளது. .
கூறுவது மட்டும்தான் செயல்பாடு ரோச்மாஹ் USA விலிருந்து வந்த பிறகுதான் அதுவும் rosmah வங்கி கணக்குக்கு போயிரும்