வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு உடனடியாக நாடு திரும்ப இயலாமல் போனதற்காக எதிரணித் தலைவர் மன்னிபு கோரினார். ஆனால், இதனை ஒரு பிரச்சனையாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
ஒத்துழைப்பு மற்றும் உதவி செய்ய விரும்புபவர்களுக்கு இடமளித்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்ட அன்வார், “அரசியலில் ஒட்டிக்கொண்டு வேறுபாடுகள் செய்யாதீர்” என்றார்.
தாம் உடனடியாக நாடு திரும்பவதற்கு பயண வசதிகள் இல்லாததோடு பயணத்திற்கான டிக்கட்டை மாற்ற முடியவில்லை என்று அவர் கூறியதாக சினார் ஹைரியான் தெரிவித்தது.
“தாமதமாகத் திரும்பி வந்துள்ளதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்”, என்று அன்வார் கூறினார்.
“நான் சைக்களில் சுற்றிவரும் நிழல்படம் வினியோகிக்கப்பட்டுள்ளது. அப்படம் வெள்ளத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. வெள்ளத்திற்கு முன்பு நான் சைக்களில் சென்றது கூட ஒரு பிரச்சனை என்று கூறாதீர்”, என்றாரவர்.
அரசியல்வாதிகள் 99% வெளிநாடுகளில் தான் இருப்பார்கள். சொந்த நாட்டில் அவர்கள் இருப்பதில்லை. சுபாங் விமான நிலையத்தின் அருகில் அரசியல்வாதிகள் வீடுகள் வாங்கி குடியிருந்தால் அவர்களுக்கு வசதி, என இருபது ஆண்டுகளுக்கு முன் நண்பர் பி.பட்டு அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியது இப்போது என் நினைவுக்கு வருகிறது.
மன்னிப்பு கோரினால் மட்டும் மக்கள் பிரச்சனை தீர்ந்து விடப் போவதில்லை. ஒட்டு வாங்க வந்த மாதிரி இப்பவும் மக்கள் பிரச்சனை தீர கீழே இறங்கி மக்களுக்காக வேலை செய்யுங்கள். வெறும் வாய் ஜாலங்கள் வேண்டாம். அவை எல்லாம் கேட்டு கேட்டு காது செவிடாகி விட்டது.
எதிர் கட்சியை சேர்ந்த உறுபினர்களை குறை சொல்லும் பாரிசன் கட்சியை சேர்ந்த அரசியவாதிகள் நாட்டின் முதல் பெண்மனியும் உல்துறை அமைகாரும் இப்பொழுது எங்கே இருகிறார்கள் என்று பொது மக்களுக்கு தெரியா படுத்த முடியும்மா .அதும் பிபிபி கட்சியை சேர்ந்த சந்திர குமரன் பதில் தர வேண்டும்.
.
வெள்ளம் தலைக்கு மேல் போய் விட்ட பிறகு எதிர்கட்சியாக இருந்தால் என்ன ஆளுங் கட்சியாக இருந்தால் என்ன?. அனைவருக்கும் ஒரே நீதிதான்.
மன்னிப்பு கேட்க்கும் தகுதி இல்லாதவன்
மக்கள் பணத்தில் jetla உலாவி மன்னிப்பு கேட்டால் kumki போன்ற மாங்கா …… உடனே மன்னிப்பு கொடுப்பானுங்க anwar மக்கள் பணத்தை பயன்படுத்த தவறியதால் பெரும் தாப்பாகி விட்டது