கட்சியின் தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமாக சங்கங்கள் பதிவகம் ம இகாவின் பதிவை ரத்து செய்வதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலு உறுதியளித்தார்.
பழனிவேலு கட்சியின் பதிவு ரத்து செய்யப்படுவதை விரும்புகிறார் என்று எழுந்த ஏராளமான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவற்றில் கட்சியின் முன்னாள் பொருளாளர் ஆர். ரமணனின் குற்றச்சாடும் அடங்கும், அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தாம் கட்சி இழுத்து மூடப்படுவதை நான் நாடவில்லை என்று கூறுகிறார்.
“கட்சியின் பதிவு எதற்காகவும் ரத்து செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அனைவருக்கு உறுதியளிக்கிறேன்”, என்றாரவர்.
“நமது வழக்குரைஞர்கள் அனைத்து பிரச்சனைகளையும் கவனித்து வருகின்றனர். அவர்கள் அடுத்த நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவார்கள். இதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை ஏனென்றால் அது மஇகாவின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும்”, என்று பழனிவேலு கூறினார்.
“இதனிடையே, மஇகாவின் உரிமைகளுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் நாங்கள் ஆர்ஒஎஸ்க்கு கூடுதல் நேரம் கோரி ஜனவரி 2 இல் ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம்”, என்று அவர் மேலும் கூறினார்.
சுய நலவாதிகளின் வெற்றியும் தோல்வியும்…..
இருப்பதிலும் ….. இல்லது இருப்பதிலும் ………அப்படி எந்த பெரிய வித்தியாசமும்…… கிடையாது!! அது மானம் கெட்டு, மத்தியானத்தில் கலை எடுக்க பட்டு தான்…. சில பல ஆண்டுகள் கடந்து விட்டனவே!!
தேர்தலில் ஏன் முறை கேடுகள்? கையால் ஆகாத தெனாவெட்டிகல் கையில் அதிகாரத்தை கொடுத்தால் இப்படித்தான் ஆகும். மானம் ஈனம் சூடு சொரணை இல்லா பிண்டங்கள்.
சாமியின் கொட்டம், பூசாரி தவிப்பு …!
கட்சி இப்போது திருமதி பழனி வேலுவிடம் …… இவர் வெறும் டம்மி …. ஆதலால் ….மம்மி பின்னல் சுற்றும் அள்ளக் கைகள் பிடியில்
மா இ கா ……
சிறந்த தலைவர்களை தன்னுள் கொண்டிருந்த ம,இ,க என்ற ஆலமரத்தின் ஆணிவேர் செல்லரித்து போச்சா? கொஞ்ச நஞ்ச கவுரத்தையும் இழந்து மற்ற இனத்தவர்கள் வாயில் அவல் மெல்லவைத்து விட்டார் ஜி,பழனிவேல்,எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடிவிட்டார்கள் குழிபறிக்கும் வேலையை சிறப்பாக செய்வார்கள்,அதற்கு மைகா வேள்பாரி தல!
பத்திரிkகை துறையை விற்ற இவனா சமுதாயத்தை காப்பாற்ற போறான்