என்ஜிஓ: கிளந்தான் வெட்டுமரத் தொழில் பற்றி விசாரணை தேவை

ngoகிளந்தானில் சட்டவிரோதமாக  மரங்கள்  வெட்டப்பட்டதுதான்  வெள்ளம்  ஏற்பட  தலையாய  காரணம்  என்பதால்  அம்மாநில  வெட்டுமரத்  தொழில்  பற்றி  விசாரிக்க அரச  விசாரணை  ஆணையம்(ஆர்சிஐ)  அமைக்க  வேண்டும்  என ஒரு  என்ஜிஓ  கோரிக்கை  விடுத்துள்ளது.

கிளந்தான்  பாஸ்  தலைவர்கள்  பலரின்  சொத்து  விவரங்களைக்  கான்பிக்கும்  ஆவணங்கள் தம்மிடம்  இருப்பதாக  Concerned Mind and Social சங்கத்  தலைவர்  பிரகாஷ்  ராவ்  கூறினார்.

வெட்டுமரத்  தொழிலுக்குப்  பின்னணியில்  இருப்பவர்களையும் சில  தலைவர்களையும்  விசாரிக்க  வேண்டும்  என்றாரவர்.