“நீங்கள் நல்லவர். மற்றவர்கள் உங்களைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்காதீர்கள்”.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவரது வீட்டில் சந்தித்தபோது பத்து கவான் அம்னோ தொகுதித் துணைத் தலைவர் கைருடின் அபு ஹசான் இப்படித்தான் அறிவுரை பகர்ந்தார்.
நஜிப் அமெரிக்கா செல்வதற்குமுன் இருவரும் சந்தித்து 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) பற்றி ஒரு மணி நேரம் பேசியதாக கைருடின் கூறினார்.
“அவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நான் போலீஸ் புகாரை மீட்டுக்கொள்ளப்போவதில்லை”. இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த பினாங்கு அம்னோ தலைவர் செய்திருந்த புகார் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவுபண்ண போலீஸ் அவரை அழைத்திருந்தது.