தீபா வழக்கின் தீர்ப்புக்கு மஇகா வரவேற்பு

deepaமுஸ்லிமாக  மதம்  மாறிய  இஸ்வான்  அப்துல்லா  தம்  மகனை  அவரின்  தாயார்  தீபா  சுப்பிரமணியம்  சந்திப்பதற்காக  நீதிமன்றத்துக்கு  அழைத்துவர  வேண்டும்  என்று  நீதிமன்றம்  அளித்த  தீர்ப்பை  மஇகா  இளைஞர்  பிரிவு  வரவேற்றது.

நீதிமன்றத்தின்  தீர்ப்பு மதிக்கப்பட  வேண்டும். அது செயல்படுத்துவதை  அதிகாரிகள்  உறுதிப்படுத்த  வேண்டும்  இல்லையேல்  அது  பொருளற்றதாகிவிடும்  என்று  மஇகா  இளைஞர்  தலைவர்  சி.சிவராஜ்  கூறினார்.

“போலீஸ்  சட்டத்தைச்  செயல்படுத்தி  தீபாவிடம்  அவரின்  மகன்  ஒப்படைக்கப்படுவதை  உறுதிப்படுத்த  வேண்டும்”, என்றவர்  ஓர்  அறிக்கையில்  வலியுறுத்தினார்.