ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கண்டுப்பிடிக்கப்பட்டது

black-boxஏர்  ஏசியா விமானத்தின்  உடைந்த  பகுதிகளைத்  தேடி  எடுக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள  இந்தோனேசியாவின்  தேடல், மீட்புக்  குழு  விமானத்தின்  வால்  பகுதி  கிடக்கும்  இடத்தைக்  கண்டுபிடித்துள்ளது.

“வால்  பகுதி  இருக்கும்  இடத்தைக்  கண்டுபிடித்து விட்டோம்.  அதைக்  கண்டுபிடிப்பதே இன்று  எங்களின்  முக்கிய  குறிக்கோளாகும்”, என  தேடல், மீட்புத்  துறை  தலைவர்  பிரான்ஸிஸ்குஸ்  பம்பாங்  சொலிஸ்டியோ  கூறினார்.

விமானத்தின்  வால்  பகுதியில்தான்   விமானியின்  உரையாடல், பயணப்  பாதை பதிவுக் கருவிகள் அடங்கிய  கருப்புப் பெட்டி  இருக்கும். .