டிஏபி: எண்ணெய் விலைவீழ்ச்சியைச் சமாளிக்க திட்டம் என்ன? நஜிப் விளக்க வேண்டும்

sittingபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  சிறப்பு  நாடாளுமன்ற  அமர்வைக்  கூட்டி  உலகளவில்  வீழ்ச்சி  கண்டுவரும்  எண்ணெய் விலை  மலேசிய  நிதிநிலைமையை  எவ்வாறு  பாதிக்கிறது  என்பதையும் அதைச்  சமாளிக்கும்  திட்டம்  என்னவென்பதையும்  விவரிக்க  வேண்டும்  என டிஏபி  வலியுறுத்தியுள்ளது.

நஜிப்பின்  2015  பட்ஜெட்,  ரிம235.2 பில்லியன்  என  மதிப்பிடப்பட்டிருக்கும்  அரசாங்கத்தின் வருமானத்தில்  30விழுக்காடு  பெட்ரோலியம்வழி  கிடைக்கும்  என  எதிர்பார்ப்பதை  டிஏபி  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்  எங்  சுட்டிக்காட்டினார்.

“எண்ணெய்  விலை இன்று  50 விழுக்காடு  வீழ்ச்சி  கண்டுள்ள வேளையில் நிலைமையைச்  சமாளிக்க  என்ன  திட்டங்கள் வைத்துள்ளார்  என்பதை  விளக்க நஜிப்  சிறப்பு  நாடாளுமன்றக் கூட்டத்தை  நடத்துவது  அவசியமாகும். கிரெடிட்  சுவீஸ்கூட  மலேசியா  அதன்  பட்ஜெட்டை  மீள்பார்வை  செய்ய வேண்டும்  எனப்  பரிந்துரைத்துள்ளது”, என்றாரவர்.