ராணுவ வீரர் உலோகத்துக்கு ஆசைப்பட்டு வெடிகுண்டு திருடியிருக்கலாம்

bombகெடாவில்  ஒரு  இராணூவ  முகாமிலிருந்து  வெடிகுண்டுகளைத்  திருடிய  படைவீரர்  அவற்றில்  உள்ள  செம்பை  விற்று  பணம் பண்ணும்  நோக்கத்தில்  அவற்றைத்  திருடியிருக்கலாம். யாரையும்  கொல்லும்  நோக்கம்  அவருக்கு  இருந்திருக்காது.

“அவற்றில்(கவச வாகன- எதிர்ப்பு ராக்கெட்டுகள்) செம்பு  இருக்கும். அதை  எடுத்து விற்பதற்காக  அவர்  அவ்வாறு  செய்திருக்கலாம்”, எனத்  துணை இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  நூர் ரஷிட் இப்ராகிம்  கூறினார்.

வியட்நாம்   போன்ற  நாடுகளில் இவ்வாறு  நடந்திருப்பதாக  அவர்  சொன்னார். அம்முயற்சியில்  மக்கள்  உயிரிழ்ந்துள்ளனர் அல்லது  உறுப்புகளை  இழந்துள்ளனர்.

“கிராமத்து  மக்கள்  பழைய  போர்-கால  குண்டுகளைத்  தேடி  எடுத்து  அவற்றில்  உள்ள  உலோகங்களைத்  தனியே  பிரித்தெடுத்து  பழைய  உலோகங்களாக  விற்பார்கள்.

“இந்த  இராணுவ  வீரரும்  அதைத்தான்  செய்ய  முயன்றிருக்கிறார்  என  நினைக்கிறேன்”, என  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம் நூர்  ரஷிட்  கூறினார்.

குருன், ஹொபார்ட்  முகாமிலிருந்து  ராக்கெட்டுகளைக்  கடத்திச் சென்ற  இராணுவ  வீரர்  ஆயுப்  ஹாஷிம் பற்றித்தான்  நூர்  ரஷிட்  விளக்கமளித்தார்.

கிறிஸ்மஸுக்கு  முந்திய  நாள் ஆயுப், அந்த  வெடிகுண்டைத்  தனித்தனியே  பிரிக்க  முயல்வதை  ஆட்கள்  பார்த்திருக்கிறார்கள்.

அப்போது  குண்டு  வெடித்ததில்  ஆயுப், அவரின் எட்டு  வயது  மகள்  நூர்  இடாயு  ஷ்ஹிரா  ஆயுப்,  அண்டைவீட்டாரின்  மகன், 4-வயது  அகிப்  முகம்மட்  ஷாரிஸால்  ஆகியோர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

ஆறு  மாத  கர்ப்பிணியான  அவரின்  மனைவி கடுமையாகக்  காயமுற்றுப்  பின்னர்  இறந்தார்.