உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி 14கே இரகசிய கும்பல் உறுப்பினர் என்று சந்தேகிக்கபப்டும் ஒருவருக்கு நற்சான்று கடிதம் ஒன்றை அமெரிக்கப் புலனாய்வுத் துறை(எப்பிஐ)க்கு அனுப்பி வைத்தது பற்றிக் கருத்துரைக்க சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் மறுத்தார்.
இன்று, புத்ரா ஜெயாவில். நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட 2015 சட்ட ஆண்டு என்னும் நிகழ்வில் செய்தியாளர்கள் கனியிடம் அவ்விவகாரம் பற்றி வினவியதற்கு அவர் அதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார்.
“இன்று எதுவும் சொல்ல மாட்டேன். இன்று நீதிமன்ற விவகாரங்கள் பற்றி மட்டுமே விவாதிக்கலாம்.
“அடுத்த முறை பதிலளிப்பேன்”, என மலேசியாகினியிடம் அவர் கூறினார்.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்வார்கள்?
ஐ ஜி, எ கி, மக்கள் பிரதமர் எவனும் வாயை திறக்க மாட்டனுங்க. ஏன், ஜக்கிட் என்னா பேச்சு பேசுவான், இப்ப வாயை திறக்குரானா பார்த்திங்கள? சத்தியம் கொஞ்ச நாளைக்கு மௌனமா இருக்கும், ஆனால் செத்துராது.
m… உலகம் பூரா நாறுது