இரண்டு வாரங்களுக்குமுன் 162 பேருடன் இந்தோனேசியக் கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் விமானத் தடப் பதிவியை இந்தோனேசிய கடல்படையின் முக்குளிப்பாளர்கள் இன்று மீட்டெடுத்தனர்.
“இன்று காலை தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து ஒரு அறிக்கை கிடைக்கப்பெற்றது” என்று தேடல், மீட்புக் குழு அமைப்பின் தலைவர் பிரான்ஸிஸ்கஸ் பம்பாங் சோலிஸ்ட்யோ கூறினார்
காலை 7:11-க்கு கருப்புப் பெட்டியின் ஒரு பகுதியான விமானத் தடப் பதிவி மீட்டெடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது.
“இப்போது விமானி அறையின் உரையாடல் பதிவியைத் தேடிக் கொண்டிருக்கிறோம்”, என்றாரவர்.