1எம்டிபி கேய்மன் தீவிலிருந்து ரிம8.2பில்லியனையும் மீட்டுக்கொண்டது

1mdbஅரசாங்க  முதலீட்டு  நிறுவனமான 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி), கேய்மன்  தீவில்  செய்திருந்த  மொத்த  முதலீட்டையும்,  ரிம8.24பில்லியன்  ரிங்கிட்டையும், மீட்டுக்கொண்டிருப்பதாக  ஒர்  அறிக்கையில்  கூறியது.

கடந்த  மாதம்  எதிரணி  எம்பிகள்,  கேய்மன் தீவில்  அந்நிறுவனத்தின்  நடவடிக்கைகளில்  வெளிப்படைத்தன்மை  இல்லை  எனக் குறைகூறியபோது அதை மறுத்த  1எம்டிபி அதன்  முதலீடுகளில்  ஒளிவுமறைவு  கிடையாது  என  மறுத்திருந்தது.