பெளத்த, இந்து தெய்வச் சிலைகளை உடைத்த முகம்மட் பிர்டோஸ் சைட்டுக்கு நீதிமன்றம் வழங்கிய ‘எளிய தண்டனை’ பலருக்கு வியப்பளிக்கிறது.
இஸ்லாத்துக்கு எதிராகக் குற்றமிழைத்தோருக்கு வழங்கப்பட்ட தண்டனையுடன் ஒப்பிட்டால் பிர்டோஸுக்கு வழங்கப்பட்ட தண்டனை “பொருத்தமற்றதாக” தோன்றுகிறது என ஷம்சேர் சிங் திண்ட் கூறினார்.
தனியார் கல்லூரில் விரிவுரையாளராக பணியாற்றும் ஷம்சேர், கடந்த செப்டம்பரில் ஹரி ராயா கொண்டாட்டம் பற்றி முகநூலில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பதிவிட்டிருந்ததற்காக செள முன் ஃபாய் என்பாருக்கு வழங்கப்பட்ட தண்டனையைச் சுட்டிக்காட்டினார்.
செள குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஒப்புக்கொண்ட அவருக்கு 1998 தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பகுதி 233(1) (ஏ)-இன்படி, அச்சட்டத்தின்கீழ் வழங்கப்படும் கூடினபட்ச தண்டனையான ஓராண்டுச் சிறைத் தண்டனை. விதிக்கப்பட்டது.
“இப்படிப்பட்ட முரண்பாடான தீர்ப்புகள் ஒரு சமயம் மற்ற சமயங்களைவிட மேலானது, அதுவே அதிகம் பாதுகாக்கப்படுகிறது என்று தப்பாகக் கருதுவதற்கு இடமளித்து விடலாம்”, என்றவர் கூறினார்.
மாமியார் உடைத்தால் மண்குடம் > மருமகள் உடைத்தால் பொன்குடம்>>>
நான் எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது– இந் நாட்டில் நீதி நியாயம் செத்து பல வருடங்கள் ஆகிவிட்டது.
“ஒரு சமயம் மற்ற சமயத்தை விட மேலானது” என்பது உண்மை தானே! நாம் யாரு நம் சமயம் கீழானது என்று சொல்ல மாட்டோமே!
இது தெய்வ சிலை என்று யார் சொன்னது ? இது பொம்மை ,சிமிண்டில் செய்த பொம்மை ,கடவுளுக்கு எங்கோயா இருக்கு கை கால் ,யாருயா பார்த்தா ?
தம்பி MOHAN moha! தெய்வச் சிலைகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. தவறில்லை . அதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். அதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் மனம் புண்படும் விதத்தில் கருத்தை கூறவேண்டாம். நல்ல நண்பர்களை தேர்வு செய்ய நீண்ட காலம் பிடிக்கும். கெட்ட பெயர் சம்பாதிக்க சில வினாடிகளே போதும்.
தம்பி மோகன் ,, உம்மை போல் நான்கு பேர் இருந்தால் போதும் … ஹிந்து சமயம் விளங்கிரும்…. கொஞ்சம் சிந்திச்சு பார் ….
மோகன்….தெய்வம் என்பது நம்பிள்ளை சார்ந்தது , நம்பிக்கையோடு வனங்க்கும் ஒரு சிலையை உடைத்து மற்றவர் மனம் வேதனைப்பட வைப்பது எந்த வகையில் ஞயம்.அவர்களும்தான் மசூதியில் ஒன்றுமே இல்லாமல் தொளுகின்றர்களே அதற்காக நம் அதை உடைத்தல் நியாமா….உங்கள் தாயாரின் படம் சுவரிரே மாட்டி வைகப்பட்டிருக்கின்றது அதை ஒருவர் வந்து எடுத்து உடைத்து கிழித்து போட்டால் நீங்கள் சும்மா விடுவிர்கள…சமயத்ஹை தெரிந்து கொள்ளுங்கள்….மகான் மாணிக்க வாசகர் சிவா பெருமன்னுக்கு ஒரு கோயில் கட்டினர் ….அது சும்மாவா
மதத்திற்காக , கடவுளுக்காக ,இறைவனுக்காக ,மனிதர்கள் தான் மண்டையை உடைத்து கொள்கிறானே தவிர,கடவுளோ, இறைவனோ அல்ல !!! இதை இந்த மனிதர்கள் எப்பொழுது உணர்வார்களோ , தெரியவில்லை.. எனக்கு இன்னொரு ஐயம்! மனிதர்கள் நம்பும் கடவுள், இறைவன், இவர்களெல்லாம் நல்லவர்களா? கெட்டவர்களா?
மோகன் சார், நமது நம்பிக்கைகள் வெவ்வேறாக இருக்கலாம். ஏன், நாம் நாத்திகராகக் கூட இருக்கலாம். அது நமது சொந்தப் பிரச்சனை. ஆனால் பொது என்று வரும் போது நமது பிரச்சனைகளை நாம் விட்டுக்கொடுக்கக்கூடாது. மற்றவர்கள் நம்மை இழிவு படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுவதை தவிர்க்கவும்.
நீங்கள் சொல்வது சரிதான் ,யாரு இல்லை என்று சொன்னது ,ஐயா,நாமலே சிலையை எழுப்புகிறோம் ,நாமளே அதற்க்கு வர்ணங்கள் பூசுகிறோம் ,நாமலே அதற்க்கு பெயர் சூட்டு கிறோம் ,பிறகு நாமலே அதற்க்கு நீர்களை தூவி ,பாலபிஷேகங்கள் செய்து அந்த சிலைக்கு நாமேலே சக்தி இருக்கு என்று சொல்லுகிறோம் ,அப்படி என்றால் ஒரு சிலைக்கு நாம் சக்தி கொடுக்கிறோம் என்றால் அந்த கடவுளை காட்டிலும் நமக்கு எவ்வளவு சக்தி இருக்கு தெரியுமா ? இலங்கையில் குழந்தைகள் கொள்ள பட்டனர் கடவுளுக்கு சக்தி இருந்தால் காப்பாற்றி இருப்பார்கள் .விமானங்கள் காணாமல் போகுது சில விமானங்கள் கடலில் விழுகிறது அந்த கடவுளாலே காப்பாற்ற முடியவிலையே ?ஒருத்தன் கோவிலை ஓடைக்க போறான் ,பாடாங் ஜாவா கோவிலை வைத்து கொள்வோமே ,அப்பொழுது ஒடிக்கும் பொது சாமி தடுத்து நிறுத்த வேண்டியதுதானே ?ஆனால் அதை தடுத்து நிறுத்த மனிதனுக்கு சக்தி இருக்கு ஆனா அவன் அதை கூட செய்ய வில்லையே .நண்பர்களே நமக்கு கோவில் முக்கியமில்லை ,எத்தனை பிள்ளைகளை உயர் படிப்புக்கு அனுப்புகிறோம் ,எத்தனை தமிழர்களுக்காக அரசாங்கத்தில் வேலை கிடைக்கும் ,பல்கலைகழகங்களில் எத்தனை தமிழ் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் ,எத்தனை தமிழர்களுக்கு அரசாங்க குத்தகை கிடைக்கும் நம் சமுதாயத்தை எப்படி உயர்த்துவோம் என்று போராடினாலே சக்தி கிடைக்கும் ,தமிழனுடைய பலவீனமே இந்த மாதிரியான கோவில்கள் தான் ,எவன் கோவிலை உடைத்தால் நமக்கென்ன அதை சாமி பார்த்துகொள்ளும் ,நமக்கு அந்த வேலை இல்லை ,நம் சமுதாயத்தை கல்வி மூலமாக எப்படி போராடி முன்னேற்றுவது என்று பாருங்கள் .அன்பு செய்தால் நீங்கள் தான் சாமி நான்தான் சிவன் .
KEDAH மாநிலத்தில் தைபூச விடுமுறை அறிவிப்பு செய்து இருக்கிறார்கள் ,இது யாருக்கு லாபம் BN கட்சிகாரனுக்குதான் லாபம் ? அவன் எதுக்கு விடுமுறை கொடுக்கிறான் ,தெரியுமா ,?ஆனால் அவனுக்கு தெரியும் கோவில் சாமி ,இதுதான் தமிழர்களின் பலவீனம் என்று ,தைபூசத்திற்கு விடுமுறை கொடுக்கிரவன்கிட்டே போயி எங்க தமிழர்களுக்கு அரசாங்க குத்தகை கிடைக்குமா என்று கேளுங்கள் கொடுப்பான இல்லையா என்று பார்ப்போம் ,இல்ல நீங்க வணக்குகிற சாமி போயி அவன்கிட்டே மன்றாடி கேட்டு வாங்கித்தான் கொடுக்க முடியுமா, எது எதுக்கெல்லாம் சந்திச படுவது என்று நம்மவர்களுக்கு தெரியாம போச்சி ,போங்கள் ..
சாமியை குறை சொன்னால் உங்களுக்கு கோபம் வருது ,ஊதுபதியில் சாமி படம் இருக்கு அந்த ஊது பத்தி முடிந்து போன பிருப்பாடு ,அச்சடிக்கபட்ட அந்த சாமி படம் நேராக குப்பை தொட்டியில் போகுது ,அப்ப மட்டும் உங்களுக்கு சாமி கண்ணுக்கு தெரியவில்ல ,,,காலண்டர் குப்பைக்கு போகுது அடே எங்கப்பா பெரிய சாமி பக்தி தாங்கப்பா உங்களுக்கு
இந்த மாதிரியான சிலைகலேலாம் உடைப்பதால் அரசியல் வாதிகளுக்கு கொண்டாடம் ..ம்ம்ம் என்ன செய்வது
முதலில் அந்த சிலையை பாருங்கள் எவ்வளவு அசிங்கமாக வடிவமைத்து இருக்கிறார்கள் .ஆபாசமாக தெரியவில்லையா ,சாமி இப்படிதான் ஆபாசமாக உடுதுமா,
நமது நாட்டின் நீதி துறை எப்படியுள்ளது என்பதை தீபா வழக்கில் இருந்தே தெரிகிறது. மகனை தாயிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இப்போது அந்த தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதான் நமது நிலையாகி வருகிறது…?
மோகன் சார், உங்கள் ஆதங்கம் புரிகிறது. மற்றபடி நீங்கள் சொல்லுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பெரியார் ஈ.வே.ரா.சொன்னது தான். ஆனால் பிரச்சனை அதுவல்ல. மாற்று சமயத்தினர் அது பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். “இந்தாப்பா, நாங்கள் ஒண்ணுமே சொல்லலே! அவங்க ஆளே அவங்க சாமியைப் பற்றி கிழி கிழின்னு கிழிக்கிறான்! அப்புறம் நாங்க சொல்ல ஏன்னா இருக்கு?” என்று மற்றவர்கள் பேசுவதற்கு இடம் கொடுக்கிறீர்கள். இதையெல்லாம் நீங்கள் பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். மற்ற சமயத்தினர் கேலி பேசுகின்ற அளவுக்கு பொது இடத்தில் நீங்கள் பேசுவது ஏற்புடையது அல்ல. ஒரு மதத்தினரை மற்றவர்கள் கேலி பேசகின்ற அளவுக்கு நீங்கள் செயல்படுவதில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மன்னிக்க நண்பா!
மோகன்-மோகன் > காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் தான். உமது குடூர பார்வை ஏன் காமத்தோடு கலக்கிறது..??கேவலமாக இல்லை ?? வீட்டில் எப்படி ?
inthudharman உங்கள் வீட்டில் நீங்கள் எப்படியோ அப்படியே நான் ,வேலைய பாக்கிறியா
மோகனின் மனக்குறை நமக்கு புரிகிறது .ஆபிரகாம் தேர வின் விளக்கமும் ஏற்புடையதே. ஆனால் இந்த ” ஹிந்து தர்மன் ” அரை வேக்காடு ஏன் வீடு வரை மூக்கை நுழைக்கிறது ???
மோகன் > யாரும் உமக்கு பதில் விமர்சனம் செய்யக்கூடாது என்றால் எதற்கு இவ்வலை தளத்தில் வருகிறீர்கள் ?? கேவலமாக விமர்சனம் செய்தால் பதிலும் கேவலமாய் தானே இருக்கும் ?? இந்த ஆத்திரம் அதை எழுதுவதற்கு முன்னே இருந்திருக்க வேண்டும் ஐயா >>
“பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் ” என்ற ஆபிரகாம் அவர்களை ஆமோதிக்கிறேன் >>
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையை உடைத்ததனால் என்ன ஆனது என்று உலகமே அறியும். கடவுளை பற்றி பேசும்பொழுது ஒரு 20 வருடங்கள் தியானத்தில் இருந்து பாருங்கள். எல்லா உண்மைகளும் தெளிவாகிவ்டும். அதன் பிறகு நீங்கள் ஒரு மகான் ஆகிவிடுவீர்கள். ஒரு 20 வருடங்கள் பொருத்து இருங்களேன்.
‘ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்’ என்ற புத்தகத்தை படித்தால், சமஸ்கிருதத்திற்க்கும் தமிழுக்கும் உள்ள அருமையான தொடர்பு வெளிப்படும்.எல்லாம் ஒன்றை ஒன்று பிண்ணியே இணைந்திருக்கிறது என்பதை அறியலாம்.தமிழும் சமஸ்கிருதமும் துலாவில் வைத்தால் துலா சமமாக இருக்கும். ஏனென்றால் இரண்டும் உயர்வான மொழிகள். இதில் வேற்றுமை கிடையாது. வடநாட்டினறுக்கு சமஸ்கிருதமும் தென்னாட்டவருக்கு தமிழும்போல்.இந்த பதிலும் ரகசியமாக அறியப்பட்டது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ரத்னா அம்மா… நல்ல பேசுறீங்க. உங்களை வெகுளி லிஸ்டில் சேர்ப்பதா? அல்லது கபடதாரி லிஸ்டில் சேர்ப்பதா என்று புரியவில்லை. இந்து சாஸ்திரங்களில் தமிழை நீச பாஷை என்றும், தாசர் மொழி என்றும் , சூத்திர பாஷை என்றும் எழுதி வைத்துக்கொண்டு , அந்த சாஸ்திரங்களை விடாபிடியாகப் பிடித்துக்கொண்டு, ஏதோ தமிழர்கள் வெறித்தனமாக நடந்துகொள்வதாக புதிய தலைமுறை இந்துமத பற்றாளர்கள் எண்ணுவதும், அதை அப்பாவி போல பதிவிடுவதும் உலகத்தினர் கண்களில் மண்தூவும் வேலை என்றால் ஒப்புவீரா? எந்த மொழியும் தமிழனுக்கு பகை மொழியல்ல எங்கள் மொழியை சீண்டாதவரை. உங்களப் போலத்தான் மற்றவரோடு இணங்கிவாழ அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் தமிழர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஆரியர்களைப் பொல ஒரு இனம் உலகில் எந்த இனமும் தமிழினத்திற்குத் தீங்கிழைத்ததில்லை என்பது மட்டும் உண்மை. எங்களை கேவலப்படுத்தும் சாத்திரங்களையும் வைத்துக்கொண்டு, எங்களோடும் பாசம் காட்டுவதாக பாசாங்கு செய்யும் துரோகத்தை தமிழர்கள் கண்டும் காணாமல் எங்களை அவமானப்படுத்துபவர்களிடம் வாலட்ட நாங்கள் என்ன நாய்களா ரத்னா அம்மா?
உண்மையிலேயே மோகன் மோகனின் வார்த்தைகள் ஈட்டியாகப் பாய்கின்றன. அவருக்கு யாருமே நேரடியான பதில் எழுதவில்லை. ஏன்? ஏன்? மனம் புண்படும்.இப்படியெல்லாம் பதிவிடலாமா? மோகன் மொகனுக்கு மதப்பற்றே இல்லையா? என்று கேட்பவர்களிடம் கேட்கிறேன். ராமயணத்தில் தமிழர்களை குரங்குகளாகவும் , தாசர்கள் என்றும் சித்தரித்த இந்து பண்டிதர்கள் அப்பட்டமாக தமிழனின் மனம் புண்படும்படி எழுதி வைத்துக்கொண்டு தங்களை உயர்ந்தவர்கள் என்று பீற்றிக்கொண்டிருக்க, மோகன் மோகன் உண்மையை எழுதினால் … இந்துக்களின் மனம் புண்படும் என்று சொல்வது நியாயமா? ஏன் ஆபாசமான சிலைகள் என்று கேட்கிறார் மோகன் மோகன். நாகரிகமாக மதம் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு மோகன் மோகனுக்கு உரிமை இல்லையா என்ன? மோகன் மோகனின் எழுத்தில் இருக்கும் உண்மைக்கு மதிப்பு கொடுங்கள். ” அய்யா.. உங்க சட்டையில கறைபடிந்திருக்கறது.” என்றால், அவன் நல்ல மனிதனாக இருந்தால் என்ன சொல்லுவான்? “ஓ அப்படியா? நன்றி! நான் கவனிக்கவில்லை. ” என்பான். ” ஏன்டா .. இது என் சட்டை! அது கறையா இருந்தா என்ன? இல்லையின்னா உனக்கென்ன வந்தது? வாயை மூடு!” என்று சொல்பவனை எவனாவது மனிதனாக மதிப்பானா? சொல்லுங்கள் தோழர்களே! மோகனினுக்கு வாழ்த்துகள்!
திரு மோகனின் கருத்துகளை படித்தபொழுது கோபம் வருகிறது .. அதே போலத்தான் தமிழனின் கருத்துகளை படிக்கும்பொழுதும் .. சிலை கவர்ச்சியாய் இருக்கிறது , மனிதனுக்கு சக்தி அதிகம் , கடவுள் ஏன் கோவில் உடைப்பை தடுக்க வில்லை , இறந்து போன மக்களை ஏன் கடவுள் காப்பாற்ற வில்லை என்று கேட்கும் பொழுது உங்களின் ஆதங்கம் புரிகிறது .. அதற்காக நம் சிலைகளை உடைப்பதில் தவறில்லையா? நான் ஒரு நாத்திகவாதி .. கடவுள் நம்பிக்கை இல்லை .. ஆனாலும் எனக்கே ரத்தம் கொதிக்கிறது .. நமக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக மற்றவர்களின் நம்பிக்கையை தவறாக பேசுவதும் , நம் உரிமைகளை விட்டு கொடுப்பதும் மிக பெரிய தவறு .. இப்படி எல்லாத்தையும் விட்டு கொடுத்துதான் இப்போ கேவலமா அசிங்க பட்டுகிட்டு இருக்கோம் .. உரிமை உள்ள மண்ணிலே, அடிமையாய் கிடக்கிறோம் .. நம்முடைய சந்ததியாவது கொஞ்சம் கௌரவத்தோடு வாழட்டுமே !!!!!!
இப்போ கோவில்களை, சிலைகளை உடைக்கும் பொழுது சிலை கவர்ச்சியா இருக்கு , கோவில் தான் நிறைய இருக்கே ஒன்னு இரண்டு உடைபட்டு போனால் பரவாயில்லை என்று இருக்கும் சும்மா கிடப்போம் .. அப்புறம் அந்த நாதாரி பசங்க இந்த தமிழனுங்கே தான் நம்ம என்ன பண்ணாலும் மூடிகிட்டு இருக்கானுங்களேன்னு இன்னும் துணிவு வந்து,நம்ம பள்ளிகூடத்தை இடிப்பான் .. இந்த தமிழனுங்களுக்கு எதுக்கு மண்டபம் , வீடு வாசல் ன்னு எல்லாத்தையும் இடிப்பான் .. அந்த நேரத்துலேயும் இதே மாதிரி நம்ம பள்ளிக்கூடம் வசதி போதாது அதான் அவன் இடிக்கிறான் , மண்டபம் வீடு வாசல் நமக்கு தேவையா ன்னு வெட்டி நியாயம் பேசிகிட்டு இருங்க .. கடைசியிலே எல்லா உரிமைகளையும் அவனுங்கேகிட்டே விட்டுகொடுத்துட்டு சாவுங்கடா பக்கி பசங்களா…
தமிழ்ப் பெண்னுக்கு… மோகன் மோகனின் ஆதங்கத்தை உள்வாங்கிக் கொண்டு , பிறகு சினங்கொள்ளப் பாருங்கள். நீங்கள் உங்களை நாத்திகவாதியென பதிவிட்டு அடையாளம் காட்டுகிறீர்கள். ஆனால் மோகன் இறைநம்பிக்கை உடையவர். அவருடைய முந்தைய பதிவுகளை பாருங்கள். பெரியாரைப் பலர் சாடிய வளையில் அவருக்காக என்னைப் போன்றோர் வாதங்களை முன்வைத்தபோது , ” இதையெல்லா படிக்க நேரமில்லை. போய் வேளையைப் பாருங்கடா! ” என்று சொன்னவர் இந்த மோகன் மோகன். ஆனால் அவர் அறிவுபூர்வமாக எழுதும்போது அதில் உள்ள உண்மைக்காக அவரைப் பாராட்ட வேண்டும். அல்லது அவரோடு கருத்து வாதம் செய்யவேண்டும். அதைவிடுத்து சினம் வருகிறது என்பது சின்னப்பிள்ளைத் தனமாக இல்லையா?
ஒன்றை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். மோகன் மோகன் கோவிலை உடைக்கச் சொல்லவில்லை. உடைப்பவனை ஆதரிக்கவுமில்லை. உடைபடும்படியான காரணத்தையே ஆதங்கமாக வெளிப்படுத்தினார். அந்த அவரின் ஆதங்கத்தில் மறைந்திருக்கும் இனப்பற்றை, வேதனையை, உண்மையை புரிந்துகொண்டால் கோபம் வராது.அவரை, அவரது உண்மையை வெளிப்படுத்தும் துணிவைப் பாராட்டவே செய்வோம். மாறாக அவரைத் துனிய மாட்டோம்.
தமிழன் > உமது பாஷையிலே சொல்கிறேன் !! வினை விதைத்தவன் அதை அறுத்துத்தான் ஆகவேண்டும்>>சிலை உடைப்பை கேவலப் படுத்திவிட்டு இன்று விமர்சனங்கள் வந்ததும் அப்படி சொல்லவில்லை என்று முரணாக பேசுவது சரியா ??
ஆலயம் > பள்ளிகள் > ஞ்னிக்ள் வாழ்ந்த இல்லங்கள் > ஆன்மீக ஊர்வலங்கள் நமது மதத்தின் பாரம்பரிய சின்னங்கள் // அவை அழிக்கப்படும் போது நாளைய சமூகம் சரித்திரம் மறக்கும் !! மீண்டு மோகனின் விமர்சனகளை தாங்கள் படித்து பார்ப்பது நன்று////
இந்து தர்மனே, ஒரு வினா?அடுத்தவர் நிலத்தில் அனுமதி இல்லாமல் கோவில் கட்டுவது, கும்பாபிஷேகம் நடத்துவது , நில உரிமையாளன் தன் நிலத்தை கையகபடுத்த முனையும் பொது அவனிடம் மல்லுக்கு நிற்பது , இவயெல்லாம் நியாயமா ? நீங்கள் குறிப்பிடும் ஞானிகள் காட்டிய வழிகளா இவை?
தெய்வம் ஒன்று என தெளிந்த அறிவே பேரரறிவு. ஐம்புலனை வென்றவனின் வீரமே வீரம். பிறர் உண்ணாமல் உண்பதே ஊண். தான் சாகாமல் கற்பதே கல்வி. இதை உண்மையாக உணராதவரை வேறுபாடுகளை களைவது கடினம். 20 வருடங்கள் தனியாக தியானத்தில் இருந்தால், பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியலாம். அப்போது எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இங்கு பொருமை மிகவும் அவசியம். காலத்தை சொல்லிவிட்டேன். அதுவே பெரிய விசயம்.
தம்பி மோகன் கல்லை கண்டால் நாய் இல்லை …. நாயை கண்டால் கல் இல்லை ….
நன்றி தமிழன்
மோகன், அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை படியுங்கள்.நானும் ஒரு காலத்தில் உங்கள் போன்றுதான் பேசினேன்.
நண்பர் மோகனுக்கு அர்த்தமுள்ள இந்துமதத்தைப் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்கிறார் திரு. தமிழ்ச் செல்வம். படிப்பதுதானே, அதில் என்ன நடந்துவிடப் போகிறது. ஒன்றும் இல்லை. நண்பர் மோகன் மோகனுக்கும், அவருக்கு அன்பு கட்டளையிடும் திரு. தமிழ்ச்செல்வத்திற்கும் நான் ஒரு சிபாரிசு செய்கிறேன் ஒரு புத்தகத்தை. அதன் பெயர் ” அர்த்தமுள்ளதா இந்துமதம்?” என்பதாகும். இருதரப்பு கருத்துகளை படித்த பின்பு கருத்திடுங்கள். நான் காத்திருக்கிறேன்!
தமிழ் இனி மெல்ல சாகும்…….???
இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.
பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.
“”உண்டு ” என சொல்லுவதற்குத்தான் மூளை வேண்டும் !! இல்லை என்று சொல்ல மூளை எதற்கு ?
மு.த.நீலவண்ணன் > அடுத்தவர் பட்டா நிலத்தில் எதற்கு ஐயா வலிந்து போய் கோவில் கட்ட வேண்டும் ? கடவுள் என்ன அவ்வளவு இளப்பமா ??எத்தனை பெரிய கோவிலாக இருந்தாலும் சமயத்துக்கு புறம்பாக < சட்டத்துக்கு புறம்பாக அமைந்திருந்தால் அகற்றுவதில் தவறில்லை !! அதை அந்த ஆண்டவனே அனுமதிப்பார் !!இதிலென்ன பிரச்சனை ??
TAMILSELVAM > தூங்குபவர்களை எழுப்பலாம் > தூங்குவது போல் பாசாங்கு செய்வாரை எழுப்ப இயலாது > நீர் “அர்த்தமுள்ள…..என்பீர் அவர்கள் “அர்த்தமுள்ளதா …” என்பர் ..””ராமாயணம் ” என்பீர் > அவர்கள் “கீமாயணம் ” என்பார்ர்கள் ..வாதத்துக்கு மட்டும் தான் மருந்து பிடிவாதத்துக்கு அல்லவே ??
இருக்கிறது என்று சொல்வதற்கும் அறிவு வேண்டும், இல்லை என்று சொல்வதற்கும் அறிவு வேண்டும். வழக்கு மன்றத்திலே… “நான் திருடவில்லை” என்று ஒருவன் சொன்னால் அவனை நீதிபதி விடுதலை செய்துவிட மாட்டார். அறிவுபூர்வமாக சான்றுகளை எடுத்து வைத்தால்தான் குற்றமற்றவன் என்பது உறுதிப்படும். கண்ணதாசனின் அறிவற்ற வாதத்தை கிளிப்பிள்ளை போல் “இல்லை என்று சொல்வதற்கு மூளை எதற்கு?” என்று இங்கே முன் வைக்கவேண்டாம்.
” அர்த்தமுள்ளதா இந்துமதம் ” எனும் நூலைப்பற்றிச் சொன்னால். இந்துதர்மனுக்கு அடி வயிறு ஓசை எழுப்புவது ஏன்? அந்த நூலில் முன் வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் என்ன குறை என்பதாவது தெரியட்டுமே. அதைவிடுத்து, ” தமிழ்ச்செல்வம் தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்களைப் போல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப இயலாது” என தமிழனை நிரந்தரத் தூக்கத்தில் தள்ள முயற்சி நடத்துகிறீரா? அர்த்தமுள்ளதுதான் இந்து மதம் என்றால் என்னுடைய இந்த சின்ன கேள்விகளுக்கு பதில் சொல்லு பார்ப்போம்.
புராணத்திலே ” வல்லபை” என்பது யார்? ” வல்லபை கணபதி” என்று எதனால் பட்டப் பெயரிட்டு கணபதியை அழைத்தார்கள்? என்ன அப்படிப்பட்ட தமிழர்கள் பண்பாட்டை நிலை நிறுத்தும் அரிய காரியத்தை செய்து ” வல்லபை கணபதி” என்று புகழ்ந்து , தமிழ் நாட்டில் மத்தூர் எனுமிடத்தில் வல்லபை கணபதி சிலையை நிருவியுள்ளனர் மாண்புமிகு இந்துக்கள் ?என்பதைச் சொல்லிவிட்டு அர்த்தமுள்ளதுதான் இந்துமதம் என்பதை என்னைப் போன்ற தூங்குவதைப்போல் நடிப்பவர்களுக்கு அறிவுக்கண் திறக்க வழி செய்யுங்கள்.
உங்களால் பதில் சொல்ல முடியாது என்றால் நீர் ஓர் இந்துவும் அல்ல, இந்துதர்மனும் அல்ல என்பதையாவது ஒப்புக்கொள்ளுங்கள். அடியேன் அது என்ன என்பதை என் அருமை தமிழர்களுக்கு அர்த்தமுள்ளவர்தானா இந்த கணபதி? அர்த்தமுள்ளதுதானா இந்துமதம்? என்பதற்கு விளக்கம் வைக்கிறேன். ஐயம் வெயிட்டிங் இந்து தர்மா!
Tamil Selvam அவர்களே சரி படிக்கிறேன் ,அந்த புத்தகம் மனிதனால் ஆராய்ச்சி செய்து வெளியிட்ட புத்தகம் ,சரி படிக்கிறேன் ,எத்தனை தடவை படித்தாலும் நான் ,சாமி படம் கொண்ட சூட டப்பாவை ,ஊதுபத்தி கொண்ட சாமி படம்போட்ட டப்பாவை ,காலண்டரையும் ,குப்பைதொட்டியில் போடத்தானே போறேன் .அப்படி பார்த்தல் அர்த்த முல்லா இந்து மதத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ? படித்தாலும் படிக்காவிட்டாலும் இந்து மதமும் தமிழ் மொழியும் அழிய போவதில்லை ,,எங்கையாவது ஒரு மூலையில் உயிர் பெற்று வரும் ,,,
தமிழன் > உங்கள் அளவுக்கு பல நூல்களில் படித்து அதை அப்படியே காப்பி எடுத்து உம்மை எதிப்போரிடம் “” அது ” வர காரணம் என்ன “இது” ஏன் அப்படி ஆனது தெரியுமா ? பதில் சொல்லுங்கள் பாப்போம் – “?? என்று பிறரை குழம்ப வைக்கும் பக்குவம் அற்ற சாதாரண இந்து நான் //
“” என்னை போல வருமா ” என பிதற்றி திரியும் மூடர்கள் மத்தியில்
” என்னை போல வாழ்ந்துவிடாதீர்கள் ” என எச்ச்காரிக்கும் நூல்கள் கண்ணதாசனின் :அர்த்தமுள்ள இந்துமத ” தொகுப்பு ..இந்துமதத்தை
நேசித்து பகுத்தறிவு பாசறையை புறம்தள்ளி ஆன்மீக தேடலில் இணைந்தவன்.>.மு… கூட்டத்திலிருந்து அண்ணா + கண்ணதாசன் வெளியே வந்த்தால் 2 மாபெரும் தமிழ் சொத்துக்கள் நமக்கு கிடைத்தது //
இந்து தர்மனே… உமது பின் வாங்களில் இரகசியம் என்ன? ஏன்? எதற்காக? என்பது அந்தப் புராணத்தைப் படித்தவர்களுக்குத் தெரியும். சொந்த மதத்தில் ஆபாசமிருந்தால் புதிய தலைமுறைகள் திருத்திக்கொள்ளவேண்டும். இல்லை என் பாட்டவன் நேரடியாக அந்தக் கடவுலிடம் கேட்டு ஞானக்கண்கொண்டு பார்த்தும் எழுதியது, அதை நான் குறைகான்பதா? தகுமா ? என்றால் வருங்காலம் பழிக்கத்தான் செய்யும்.
பல நூல்களைப் படிக்க வேண்டும். படித்ததில் நல்லதை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான நூல்களுக்குப் பொருந்தும். கடவுளின் பெயரில் எழுதப்படும் எந்த நூலிலும் ஆபாசமோ,குற்றமோ காணப்படின் அதை தூக்கி வீசும் தைரியம் வேண்டும். வீம்புக்காக என் மதம்போல் உண்டா? இதுதான் சிறந்தது? என்று வெறும்பீற்றல் பீற்றினால் அதற்கு கேள்விகள் எழத்தான் செய்யும்.
இப்படித்தான் கிறிஸ்துவ வேத நூலை பதிப்பிடாமலும், பொதுமக்கள் படித்து அறிவு பெற்றுவிடக் கூடாதென்றும் வத்திகனில் ,அந்நாளில் குருமார்கள் அவர்களுக்கள்ளேயே வைத்துக்கொண்டு , மற்றவர்கள் கைகட்டி அமர்ந்து கேட்டுவிட்டுப் போகவேண்டும். மற்றவர்கள் படித்தால் கேள்வி கேட்பர். பலருக்கு அதைச் சொல்வர். இந்த உயர் கோஸ்டிக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என்று மறைத்து வைத்தனர். ஆனால் காலம் ஒன்று வந்தது படித்த இளைஞர்கள் வெகுண்டனர்; எதிர் கேள்வி கேட்டனர்; இன்று பிச்சைகாரர்களின் கைகளிலும் பைபிள் இருக்கிறது.
உலகம் தட்டையானது என்று ஆதியிலே பைபிள் பழைய ஏற்பாட்டில் இருந்ததாகவும், கற்றோரின் அறிவுரைக்கு மதிப்பு கொடுத்து , அதை. வத்திகன் திருத்திக்கொண்டதாகவும் ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். ஆனால் இங்கே எப்படி? எவன் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன? நாங்கள் ஒரு தடவை எழுதிவிட்டால் யாருக்காகவும் மாற்றவே முடியாது என்பதல்லவா இந்து உலகத்தின் வாதம்.
இதனால் தமிழன் பாதிப்படைந்தால், அதை வெளிச்சமிடுவது நல்ல தமிழர்களின் கடமை. அதைத்தான் நானோ அல்லது வரக்கூடிய காலத்தில் மற்ற தமிழனும் எழுதுவான். “நீங்கள் எழுதி என்ன கிழித்தீர்கள? உங்கள் எழுத்தை யார் மதிப்பார்கள்? ” என்று மதவாதிகள் கேட்களாம். அறிவு உலகம் இது. எல்லா அபத்தங்களும் உடைபட்டுக் காணாமல் போகும் காலம். அப்பாவித் தமிழன் விழித்தெழும் காலமிது. தலைவிதி, பஞ்சாங்கப் புளுகு, உயர்சாதி,தாழ்ந்த சாதி, நாலுகலர், ஐந்து கலர் என்பனவெல்லாம் எடுபடாமல் போய்விடும். ஒரு குலத்திற்கு ஒரு நீதி என்பதைப் போதிக்கும் புத்தகத்தை எல்லாம் படித்தவர்கள் இப்போதே சிரிக்க ஆரம்பித்து விட்டனர். ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அடிமைத்தனத்தைவிட, அரேபியாவில் நடத்தப்பட்ட அடிமைத்தனத்தைவிட, அமெரிக்காவில் நடைபெற்ற அடிமைத்தனத்தைவிட இந்தியாவில் மதத்தின் பெயரில் நடைபெற்ற அடிமைத்தனம் கொடுமையானது. உயர்சாதி ஆதிக்க மதவாதிகள் வைதீகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி செய்த தாங்கொன்னா, மனிதாபமற்ற கொடுமைகள், அதிலும் பெண்களுக்குச் செய்த கொடுமைகளை அறிவுலகம் ஒருபோதும் மன்னிக்காது. அடிபட்டவன் பரம்பரை எக்காலத்திலும் மறக்காது. உம்மைப் போன்றோர் தொடர்ந்து மதவாதம் பேசி மக்களை மாக்களாக்கும் காரியத்தை செய்யாமலிருப்பதே மனித குலத்திற்குச் செய்யும் பெரும் தொண்டாகும். உமக்காக, அந்த வல்லபை கணபதியைப் பற்றி எழுதாமல் விடுகிறேன். தயவு செய்து கந்த புராணம், விநாயப்புராணம் போன்றவற்றைப் படித்து அதிலுள்ள ஆபாசங்களைக் கண்டு அதற்காக வருத்தப்படுங்கள்.! நன்றி!
தமிழன் அவர்களே,,!!! நீங்க மெத்த படித்த மேதாவி என்பது தெரியும்…. நீங்க படிச்சா கந்த புராணம் / விநாயகர் புராணம் யார் வியாக்கியானம் கொடுத்தார்கள்.கண்டிப்பாக உங்களைப் போன்ற இந்து மத சமய தெளிவில்லாதவர்களாகத்தான் இருக்கும். குருடனும் குருடனும் சேர்ந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டாம் என்று என் விண்ணப்பத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
ரிஷி தம்பி கோபத்தை என்னிடம் காட்டினால் எப்படி? உண்மையைச் சொன்னா தமிழன் மானம் போகும். இது என்னுடையதோ அல்லது ஈரோட்டு சரக்கோ அல்ல. சாட்சாத் இந்து பக்தர்கள் எழுதியுது. முதலில் , பக்கத்தில் உள்ள புத்தகக் கடைக்குச் சென்று புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு இங்கே வந்து உம் மேதாவிலாசத்தைக் காட்டும். அப்போ தெரியும் யார் தெளிவில்லாதவர்கள் என்று. சும்மா கூவினால் மட்டும் சாக்கடை சந்தனமாகிடாது. யார் குருடர் என்பது அப்போது உமக்குத் தெரியும்.
சரி நான்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு பிதற்றுறேன். நீயாவது சொல்லும் அந்த வல்லபை கணபதி யார் என்று. எதற்காக அந்தப் பட்டப் பெயர் வந்ததென்று . ரிஷி நீர் யாரென்று எனக்குத் தெரியும். சும்மா சவுன்டு விடாதேயும்! உங்க கோபத்தை எல்லாம் இந்த அம்புலி மாமா கதை படிப்பவனிடமும், சினிமா பக்கத்தைப் படித்துவிட்டு அடுத்தப்படம் எப்போ தியேட்டருக்கு வரும் என்று காத்திருப்பவனிடம் போய் காட்டும். என்னிடம் வேண்டாம்.
தமிழன் > பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களிடையே புழங்கி வரும் இந்துமத புராணங்களிலும் -இதிகாசங்களிலும் பல அசிங்கமான கூற்றுகள் உள்ளன என்பதை தொடர்ந்து கூவிவரும் உம்மை போன்ற கோணல் புத்திகார மூடர்கள் மட்டும் தான் அந்த பகுதிகளை ( மட்டும்) உங்களுக்கு தகுந்த வகையில் காம கண்ணோடு படித்துள்ளீர்கள் ( அல்லது பிறர் படித்து சொன்னதை அப்படியே வாந்தி எடுத்துள்ளீர்கள் ) >
எது எப்படியோ > சரியான இந்துக்கள் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் படித்து தமது ஆன்மீக வாழ்வை
மேற்கொண்டு வருகின்றனர் > அவர்களுக்கு உம்மை போன்றவர்களின் “காம” வழிக்காட்டுதல் தேவையில்லை !எதை எப்படி படித்து எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவம் இந்துமக்களுக்கு உண்டு !
வைதீகம் எந்த அளவிற்கு அறிவிலிகளை இந்த உலகிற்கு தந்துள்ளது என்பதை அறிவாளிகள் உலகம் அறியும். // ” கோணல்……. அந்தப் பகுதிகளை மட்டும்…….” // ( அந்த அசிங்கப் பகுதிகளை மட்டும் ) என்று பதிவிடும் நீ ஒப்புக்கொள்கிறாய் அப்படிப்பட்ட அசிங்கங்கள் உள்ளன என்று. ஆனால் நீ அவற்றையெல்லாம் சென்சர் செய்துதான் படிக்கிறீர். அந்த அளவிற்கு ஆபாசம். வெளியில் சொல்ல வெட்கம் ! இருக்கிறது என்று ஒப்பாமல் மறைமுகமாக ஒப்புக்கொள்ளும் நீ ….. அர்த்தமுள்ளதுதான் இந்துமதம் என்று ஏன் போலியாக பிதற்றுகிறாய்? உலகத்தில் எல்லோரும் அடுத்தவரின் எழுத்தைப் படித்துதான் உலக அறிவைப் பெறுகின்றனர். நீயும் உன்னைப் போன்ற மதவாதிகளும்தான் நேரடியாக ஞானத்தைப் பரலோகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுகிறீர்கள். நீங்களெல்லாரும் படிக்காத மேதைகள். நான் மட்டுமே உலகத்தான் எழுதியதைப் படிப்பவன்.
தேவர்களை மீட்க அசுரர்களை அழிக்கும் போரில் ஸ்கந்தன் எதிரிகளின் படையைக் கண்டு தடுமாறுகிறான். அசுரக்கூட்டம் திபு திபுவென வந்தவண்ணம் உள்ளது. எங்கிருந்து வருகிறது என்று அண்ணன் கணபதி பார்க்கிறார். வல்லபையின் யோனியிலிருந்து படைகள் வந்தவண்ணம் உள்ளன. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிய கணபதி தனது துதிக்கையைக்கொண்டு வல்லபையின் யோனியை அடைத்து எதிரிப் படைகள் வராமல் தடுக்கிறார் கணபதி. இறுதியில் ஸ்கந்தன் வெற்றி பெறுகிறார். இந்தக் கணபதியின் சமயோசிதப் புத்தியை மெச்சித்தான் வைதீகக்கூட்டம் தமிழனின் மானத்தை வாங்க தமிழ்நாட்டில் மத்தூர் என்னுமிடத்தில் கணபநியின் இந்த யோனியடைப்புக் காட்சியைச் சிலையாக வைத்துள்னர். இந்து தர்மனே… சினம் காத்த என்னை சீண்டினீர். உம் அர்த்தமுள்ள இந்துமதத்தின் மேல் என்னை வெளிச்சமிட வைத்துவிட்டீர் . பிடிவாதம் தொடர்ந்தால்…. நீசத்தனம் தொடர்ந்தால்….. அடுத்து கங்கைக் கரையோரம் வைதீகக் கூட்டம் புரியும் அட்டகாசத்தை படம்பிடித்து உம்முடைய மத த் திரையைக் கிழிக்க நேரிடும்.
அப்படி என்றால் அந்த தெய்வ சிலையை உடைதவருக்கு தூக்கு தண்டனை கொடுக்கலாமா ?சிலையை உடைத்தால் பருவாயில்லை மீண்டும் அந்த சிலையை உருக்கி கொள்ளலாம் ,,சிலையை உடைத்தவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் அவன் செத்து விடுவான் ,மீண்டும் செத்தவனை உயிரோடு கொண்டு வர முடியுமா ??அதனால் தான் கடவுள் கல்லாக இருக்கிறார் .கோப படுகிறவர்கள் என்னை உடைகட்டும் மீண்டும் பக்தர்களை கொண்டு நான் உருவெடுத்து சக்தி பெற்று விடுவேன் என்று கடவுள் இன்று வரையிலும் கல்லாக இருக்கிறார்கள் ,,
அப்படி போடுங்க ,உங்களை போல நாலு பேரு இருந்தா அந்த முருகன் சாமியே நேரா வந்து ஜிங்கு ஜிங்கு ன்னு ஆடிட்டு போகும் ,,,ஒம் முருகா
இந்து மத சிலையை உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் நாளை இந்து மதத்தை சேர்ந்தவனுக்கும் கை கால் உடையும். அப்பொழுதும் அவைகளை உடைத்தவனுக்கு இப்படி பட்ட தண்டனைதான் கிடைக்கும். அப்பொழுது உனக்கு எதற்கடா கை கால்கள் என்று சொல்லி பேசாமல் இருந்து விடலாமா? ஆஸ்திகனாக இருக்கலாம்.தவறில்லை. ஆனால் பகுத்தறிவற்ற,இன உணர்வற்ற ஒரு கேணத்தனமான உணர்வுதான் ஒரு நாஸ்திகனுக்கு இருக்க கூடாது.அது மேலே உள்ளவனுக்கு வஞ்சகமில்லாமல் பெருகி கிடக்கிறது.
அட அல்ப தமிழன் > உன்னை போல பல இந்துமத எதிர்ப்பு பிக்காளிகள் இட்டு கட்டிய இந்த கதையை பிடித்து கொண்டா ” இந்த கதை தெரியுமா ” அந்த கதை தெரியுமா ” ? என வாய் சவடால் விட்டாய் ?? உன் கோணல் புத்தியை காட்டி . நீ எந்த ரகம் என்பதையும் காட்டிவிட்டாய் // நீ என்ன சுண்டக்காய் என் இந்துமதத்தை கேலி செய்ய !! நீ அல்ல > உன் முப்பாட்டன் வந்தாலும் எமது மதத்தின் ஒரு புல்லை கூட பிடுங்க முடியாது !!
புராணங்களை வைத்தெல்லாம் கதைவிட வேண்டாம் ! இறைவனின் தராதரம் உணர்வுள்ள இந்துக்களுக்கு நன்றாகவே தெரியும் >>இது போன்ற காமாந்தக திரிபு கதைகளை உன் வீட்டு பெண்களை சுற்றி அமர செய்து வாய்விட்டு சொல் – வாயை திறந்து கேட்பார்கள் – உன் ரகம்தானே ??நன்றாகவே ரசித்து கேட்பார்கள் ///