அம்னோ தலைவர் நஜிப் ரசாக் தேச நிந்தனைச் சட்டத்தில் திடீர்-பல்டி அடித்து அம்னோவில் தம்மைக் குறைகூறுவோரின் வாயை அடைக்கலாம் என்று நினைத்தார். ஆனால் முடியவில்லை. அதனால் என்ன, அச்சட்டத்தை ஒட்டுமொத்தமாக அகற்றுவாரானல் அவர் தம் செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்கிறது பிகேஆர்.
“நஜிப், தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்யாமல் வைத்துக்கொண்டால் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் உள்பட அம்னோவின் வலச்சாரிகளைத் திருப்திப்படுத்தலாம் எனத் தப்பாகக் கணக்குப் போட்டு விட்டார்.
“அதனால் கண்ட பலன்…….அவர்மீதான தாக்குதலை அவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்”, என்று பிகேஆர் பாடாங் செராய் எம்பி என். சுரேந்திரன் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
2012-இல், பொதுத் தேர்தலுக்குமுன் காலனித்துவ கால தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை மீறும் முடிவை நஜிப் பிரதமர் என்ற முறையில் அறிவிக்கவில்லை. கட்சித் தலைவராகத்தான் அறிவித்தார்.
“அம்னோ பொதுப் பேரவையில் அம்னோ தலைவர் என்ற முறையில்தான் அந்த அறிவிப்பைச் செய்தார்.
“இங்கு என்ன கட்சி ஆட்சியா நடக்கிறது? அம்னோதான் அமைச்சரவையையும் அரசாங்கத்தையும் வழிநடத்துகிறதா?
“ஜனநாயக நிர்வாகமுறை சீர்குலைந்து நசட்டில் கட்சி சர்வாதிகாரம் மேலோங்குவது நாட்டுக்கு நலலதல்ல”, என சுரேந்திரன் கூறினார்.
சுரி4திறன் உங்களுக்கு இ4த கேஸ் விவரங்கள் தவிர மாற எதுவும் தெரியாதா அதை நிங்கள் அன்வாருக்காக வாதாடினால் போதும் கத்துக் KUDDI