புத்ரா ஜெயாவில் இந்து ஆலயம் கட்டப்படுவது பற்றிக் “கேள்வி எழுப்பி” அதை ஒரு “விவகாரமாக்க முனையும்” பெர்காசாவைக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் சாடினார்.
“அவர்கள் எதற்காக சத்தம் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆலயங்கள் கட்டப்படுவதால் புத்ரா ஜெயா மொத்தமும் இந்து நகரமாகி விடாது”, என ஸ்ரீகெம்பாங்கானில் செய்தியாளர்களிடம் அட்னான் தெரிவித்தார்.
“அந்த வளாகத்தில் ஒரு மண்டபம், நூலகம் ஆகியவையும் உள்ளன. அந்த வசதிகளை முஸ்லிம்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
“மற்ற கோயில்களைப்போல் அல்லாமல் இதை வேறு மாதிரியாகக் கட்டுகிறார்கள்”, என்றாரவர்.
தமிழர் கட்டும் கோவில்களுக்கு இருக்கும் கோபுரம் போன்று இல்லாமல், வட இந்தியாவில் கோலோச்சிய இஸ்லாமியர்களான “மூரியர்கள்” கட்டும் கோபுரம் போன்ற வடிவில் கோபுரங்கள் இருப்பத்தைத்தான் “வேறு மாதிரியாகக் கட்டுகிறார்கள்” என்று தெங்கு அட்னான் கூறினார். இவ்வித கோவில் அமைப்பு தென் இந்தியர் வழி வந்த ஆலய கட்டிட கலைக்கு மாறுப்பட்டது. இது கோவாவில் போர்த்துகீசியர் காலத்தில் ஒரு தேவாலயத்தைப் போன்ற வெளிப்புற அமைப்பைக் கொண்ட கட்டிடத்திற்குள் இந்து மத திருவுருவங்களின் சன்னதியை நிறுவி வெளியே தெரியாத வண்ணம் இந்துக்கள் என்போர் வழிபட்டதர்க்குச் சமமாகும். வாழ்க செமுவேல் தொண்டு. தங்கள் நாட்குறிப்பில் குறித்துக் கொள்ளுங்கள். 300 ஆண்டுகள் கழித்து இந்நாட்டின் அரசியல் நிலை மாறும்பொழுது கோவாவில் இருந்த நிலையை நாம் இங்கே கண்டோம் என்று ஒரு வரலாற்றுக் குறிப்பு தெள்ளத் தெளிவாகச் சொல்லப் படும்.
எல்லாம் அவர்கள் சொந்த ஆதாயட்கு தான் !!!!!!!!!!!!!!!
எத்தனை தோட்டங்கள் அதில் எத்தனை கோவில்கள் எல்லாம் எங்கே
சாமி அவற்றையும் பேரம் பேசி விட்டாரா செட்ஜிலி, பிராங்க் புசார் போன்ற பல தோட்டங்கள் அங்கே இரு4தன .அங்குள்ள கோவில்களை வேலு வேடையாடி விட்டாரா
கோவில் கட்டென மட்டும் போதாது நமேவேர்கள் நேரேயே இருக்கும் இடத்தில தமிழ் பள்ளி குடமும் கட்டே vendum
ஐயா சிவா, நீங்கள் முதலில் தமிழை நன்றாக எழுத, வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள். பிறகு தமிழ்ப்பள்ளி கட்டுவது பற்றி யோசிப்போம் . சரியா?
மலேசியாவில் நம்மவர்கள் எதை செய்தலும் தான் பிரச்சனைகள்
வரும்..அடுத்த மானிடர்கள் என்ன செய்தலும் வெளிய தெரியாது…அவர்கள் கோலை செய்தலும் ஒன்றும் வெளி வரத்து..