எம்ஏசிசி டயிமுக்கு எதிராக அன்வாரிடம் வாக்குமுலம் பெறும்

daimமுன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின், அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுத்தியதாகக்   கூறப்படுவதன்  தொடர்பில்  எதிரணித்  தலைவர் அன்வார் இப்ராகிமிடமிருந்து வாக்குமூலம்  பதிவு  செய்யப்படும்  என  மலேசிய  ஊழல்  தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி)  கூறியது.

டயிமுக்கு எதிராக “வலுவான  ஆதாரம்”  வைத்திருப்பதாக  அன்வார்  இப்ராகிம்  கூறியிருப்பதை  அடுத்து எம்ஏச்சி  இம்முடிவுக்கு  வந்துள்ளது.

டயிமுக்கு  எதிராகக்  கூறப்படும்  குற்றச்சாட்டு  தொடர்பில்   அவருடன்  “அண்மையில்”  நேர்காணல்  நடத்தப்பட்டதாகவும்  ஊழல்  தடுப்பு  ஆணையத் துணைத்  தலைவர் முகம்மட்  ஷுக்ரி  ஓர்  அறிக்கையில்  கூறினார்.