‘பீதியைப் பரப்பிய’ வலைப்பதிவருக்கு ஈராண்டுச் சிறை

blogஈராண்டுகளுக்குமுன்  லாஹாட்  டத்துவில்  ஊடுருவல்  நிகழப்போவதாக  மக்களிடையே  அச்சத்தைப்  பரப்பியதற்காக  பக்கத்தான்  ரக்யாட்  ஆதரவாளரும்  ‘மிலோசுவாம்’ என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  பதிவாளருமான  யூசுப்  அல்-சித்திக்குக்கு  ஈராண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்பட்டது.

இரகசிய  ஆவணம்  என்று  கூறி,  போலீசார்  சாபா  ஊடுவருலை  எதிர்கொள்ள  ஆயத்தமாகி  வருகிறார்கள்  என்று  கூறும்  ஆவணத்தைப்  பதிவிட்டதற்காக  குற்றவியல்  சட்டம்  505 பிரிவின்கீழ்  2013  ஜூனில்  அவர்மீது  குற்றம்  சாட்டப்பட்டது.

அக்குற்றத்துக்காக  அவருக்கு  அச்சட்டத்தின்கீழ்  கூடின பட்ச  தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.  ஆனால், அவர்  மேல்முறையீடு  செய்வதற்கு  வாய்ப்பளித்து  தண்டனை  நிறைவேற்றம்  நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது.