நிக் அசீஸ் நலமே உள்ளார், ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்

nikபாஸ்  கட்சியின்  பெருமதிப்புக்குரிய  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அப்துல்  அசீஸ்  நிக்  மாட்  கடுமையாக  நோயுற்றிருப்பதாகக்  கூறப்படுவதை  அவரின்  மகன்  மறுக்கிறார்.

“அவர்  வீட்டில்  நலமாக  ஓய்வெடுத்துக்  கொண்டிருக்கிறார். படிக்கிறார், நடக்கிறார்”, என  நிக்  அப்டு  கூறினார். ஆனால், அவர்  உடல்  சற்றே தளர்ச்சியுற்றிருப்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார்.

தளர்ச்சியின்  காரணமாக  அந்த  முன்னாள்  கிளந்தான்  மந்திரி  புசார்  இப்போதெல்லாம்   பள்ளிவாசல்களில்  நடைபெறும்  கூட்டு  வழிபாடுகளில்  கலந்துகொள்வதில்லை  என்றும்  அவர்  தெரிவித்தார்.

நிக்  அசீஸ்  படுத்திருப்பதையும்  அவரைச்  சுற்றி  அவரின்  குடும்பத்தார்  நின்று  கொண்டிருப்பதையும்  காண்பிக்கும்   நிழற்படமொன்று  சமூக  வலைத்தளங்களில்  பதிவிடப்பட்டதை  அடுத்து  அவரது  உடல்  நிலை  மோசமடைந்திருப்பதாக  வதந்திகள்  உலவுகின்றன.