தேசிய சேவையை ஒராண்டுக் காலம் நிறுத்திவைக்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முடிவு செய்திருந்தாலும் தேசிய சேவை முகாம் நடத்துனர்கள், பயிற்றுனர்கள் ஆகியோரின் நிலை பாதிக்கப்படாது எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார்.
“முகாம்கள் மூடப்படுவதால் நடத்துனர்கள், பயிற்றுனர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் நிரந்தரப் பணியாளர்கள்”, என ஹிஷாமுடின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
மிகச் சரி. அவர்கள் என்ன இந்தியர்களா பணி நீக்கம் செய்ய!
டத்தோ மூகனுக்கு சரியான அடி
எல்லாருமே அம்னோ காரன்கள் அப்படி இருக்கையில் எப்படி பணி நீக்கம் செய்ய முடியும்?
கேமரன் மலையில் சட்டவிரோத தொழிலாளர்கள் 30,000 பேர் உள்ளனராம். அவர்களைப் பிடிக்க, இராணுவம், போலீஸ், குடினுழைவுத்த் துறை, ஜே.பி.ஜே. என அனைத்து இலாகாக்களும் குழுமிவிட்டதாம். இந்த இலாகாவைச் சேர்ந்தவர்கள், மற்றும் தேசியச் சேவையைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் அந்த கேமரன் மலை விவசாய நிலங்களில் வேலை செய்தார்களேயானால், சட்டவிரோத வேலையாட்கள் நமக்கு தேவையே இல்லை. அதுமட்டுமல்ல, இந்த வேலையாட்களால்,நம் நாட்டு பணம் வருடந்தோறும் ஒரு பில்லியன் வெள்ளி வெளிநாடுகளுக்கு செல்கிறதாம். என் யோசனையை நஜிப் ஏற்பாரேயானால், நாட்டுக்கு நன்மை, இல்லையேல் ரோசம்மாவின் வைர மோதிரங்களை எல்லாம் விற்க வேண்டி வரும். நாடு திவாலாகிக் கொண்டு வருகிறது. [நான் சொல்லி எவன் கேட்கிறான்]
நாட்டுக்கு தேசிய சேவை மிக மிக அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இப்போதைய நடைமுறைப் பயிற்சியும் பயிற்சி முகாமும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய தக்க தருணம் இது. ஒவ்வொரு பள்ளியிலும் 4-ஆம் படிவ மாணவர்களுக்கு இந்த தேசிய சேவயை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு (4-ஆம் படிவ மானவர்களுக்கு) இந்தப் பயிற்சியை புகட்டலாம். இப்படிச் செய்வதால் பயிற்சி முகாம் என்று சொல்லி மில்லியன் கணக்கில் மக்களின் பணத்தைப் பாழாக்காமல் சேமிக்க முடியும். அனால் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் இந்தப் பயிற்சி முகாம் அமைத்ததற்கு நோக்கமே ஆயிரக்கணக்கான ‘அவர்களை’ கோடிசுவரர்களாக உருவாக்க வேண்டும் என்பது அல்லவா?
ஆஹா அருமையான யோசனை ஓராண்டு சம்பளம் இனாம் இதட்கு எவளவு செலவு?
செல்லாது செல்லாது நான் தினமும் 8அவர்குமெல் வேலை செய்கிறேன் பிறகு சம்பளம்,இவர்கள் வேலை செய்யாமல் சம்பளமா?தீர்ப்பு மாற்றுங்கள் அமைச்சரே !!!
முட்டாள்களிடம் நாடு இருந்து படும் பாட்டை பார்க்கும் பொது இதைவிட கேவலம் என்ன வேண்டும் .செழுமையான வளம் நிரந்த நாட்டில் இருந்துகொண்டு நாட்டை வழி நடத்த தெரியாத கு முட்டைகள் எல்லாம் மந்திரிகளாக இருக்கின்றனரே . உண்மை சொன்னால் நமக்கு சிறை வாசம் . பூமிபுத்ரா என்ற அந்தஸ்து உண்மையில் யாருக்கு சொந்தமோ அவர்கள் மௌன மாக இருக்கும் பொது வந்தேறிகள் எல்லாம் நாட்டை சீரழிகின்றனர்
வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் வித்தையோ இது?.