நீதிமன்றம்: வழக்குரைஞர்களின் கைது சட்டவிரோதமானது

lawஆறாண்டுகளுக்கு  முன்பு  மெழுகுதிரி  போராட்டம்  நடத்திய  14 பேருக்குச்  சட்ட  உதவி  வழங்க  முன்வந்த  ஐந்து  வழக்குரைஞர்கள்  கைது  செய்யப்பட்டது  சட்டவிரோதமானது  என  உயர்  நிதிமன்றம்  வழங்கிய  தீர்ப்புக்கெதிராக  போலீசும்  அரசாங்கமும்  செய்திருந்த  மேல்முறையீட்டை  முறையீட்டு  நீதிமன்றம் இன்று  தள்ளுபடி  செய்தது.

நீதிபதி  ஸஹாரா  இப்ராகிம்  தலைமையில்  மேல்முறையீட்டை  விசாரித்த  மூவரடங்கிய  நீதிபதிகள்  குழு , கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்  ஐந்து  வழக்குரைஞர்களுக்கும்  வழங்கிய  இழப்பீட்டையும்  நிலைநிறுத்தியது.

நீதிபதி  ஸஹாராவுடன்  நீதிபதிகள்  வர்கீஸ்  ஜார்ஜ்  வர்கீஸ், பிரசாத் சந்தோஷம்  எப்ராஹம்  ஆகியோரும் அம்முறையீட்டை  விசாரித்தனர்.

வழக்கில்  சம்பந்தப்பட்ட ஐந்து  வழக்குரைஞர்கள்  ஃபாட்யா  நத்வா  பிக்ரி,  முரினி  ஹிதயா  அனுவார், புஸ்பவதி  ரோஸ்மான்,  ஷயினி  சப்வான்,  ரவீந்தர்  சிங்  டாலிவால்  ஆகியோராவர்.