யாருக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அமெரிக்க புலனாய்வுத் துறைக்குக் கடிதம் எழுதினார் எனக் கூறப்படுகிறதோ அந்த பால் புவாமீது இன்று பூர்வாங்க விசாரணை தொடங்குகிறது.
இந்தப் பூர்வாங்க விசாரணையில் அரசுத்தரப்பும் எதிர்த்தரப்பும் நீதிபதியைச் சந்திப்பார்கள்.
நீதிபதி வழக்கின் தன்மையை ஆராய்வார். வழக்குக்கு அடிப்படையான ஆதாரங்களும் விவாதிக்கப்படும். இரு தரப்புக்குமிடையில் ஒரு சமரசம் காணப்படவில்லை என்றால் வழக்கு விசாரணைக்கு நீதிபதி நாள் குறிப்பார்.
பால் புவாவும் அவரின் புதல்வர் டேர்ரன் புவாவும் கடந்த ஆண்டு லாஸ் வேகாஸ் சீசர்ஸ் பேலஸ் சூதாட்ட விடுதியில், சட்டவிரோதமாக இணையத்தில் பந்தயம் கட்டும் சூதாட்டத்தை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டனர் அவர்கள்மீது சட்டவிரோத சூதாட்டத்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது..