சிருல் அஸ்ஹார் உமர் விடுவிக்கப்படவில்லை, இன்னமும் தடுப்புக் காவலில்தான் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஆஸ்திரேலிய குடிநுழைவு, எல்லைப் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது.
“அந்த ஆள் இன்னமும் குடிநுழைவுத் துறை காவலில்தான் உள்ளார். மேல் விவரம் எதையும் அளிப்பதற்கில்லை”, என அத்துறை பேச்சாளர் ஒருவர் மலேசியாகினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறினார்.
மலேசிய நாளேடுகளான பெரித்தா ஹரியானும் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சும் சிருல் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தன.