மலேசிய பிரதமர் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்திற்குள் செல்வதற்கு மலேசியாகினிக்கு மீண்டும் இன்று தடை விதிக்கப்பட்டது.
துணைப் பிரதமர் முகைதின் யாசின் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது அங்கிருந்த பாதுகாவலர்கள் மலேசியாகினியை உள்ளே விட உடனடியாக மறுத்து விட்டனர்.
“மலேசியாகினி உள்ளே செல்லவே முடியாது”, என்று ஒரு போலீஸ் பணியாளர் கூறினார்.
பிரதமர் அலுவலக வளாகத்தினுள் நடப்பது எந்த அமைச்சரின் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி விதிக்கப்பட்டுள்ள தடை நிலைநிறுத்தப்படுகிறது என்பதை அங்கிருந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதுதான் செத்த மலேசியா, மன்னிக்கவும் சத்து மலேசியா.
உண்மை கசக்கும்.
சரியான நடவடிக்கை… அப்போழுதுதானே உண்மை வெளிவராது…
உண்மையை வெளிபடுதபவர்களுக்கு இங்கு நாயம் கிடைக்காது இது தான் ஜனநாயகம் சத்து மலேசிய .
தனது தோழமை கட்சியான மஇகாவின் ‘நியமன’ தலைமை செயலாளர் RoS-க்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து தேசிய முன்னணிக்கு அவமானத்தை தேடி தந்ததை, மலேசியாகினியில் வெளிவந்த மக்கள் கருத்துக்களால் வந்த மன உளைச்சலால் இந்த தடை விதிக்க பட்டிருக்கலாம்.
வெளியிலிருந்து செய்தி சேகரியுங்கள் அப்பு..
ஏன் உள்ளே விடலனா அங்கே பழனியும் சுப்ராவும் சிரிச்சி பேசிகிட்டு இருப்பார்கள். வெளியே வந்ததும் சண்டை போடறமாதறி நடிப்பனுங்க, அப்பத்தான் இந்த மா இ கா பசங்கல ஏமாத்தலாம். இப்படியே இந்த தேங்கா கூட்டனி அடுத்த தேர்தல் வரைக்கும் நாடகம் ஆடும்….இத சாந்தியும் அடேங்கப்பா என்னமா அரசியல் பன்றைங்கனு….செம்பருத்தியில் அளந்து தள்ளுவாங்க ….
கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும்.
காலம் கடந்த முடிவு..
கும்கி , கொஞ்சம் அமுக்கிகிட்டு இருக்கியா …..
ஒரு வேளை கதவ சாத்திட்டு உள்ளே தூங்கரார்கல ?