பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, ஊராட்சித் தேர்தல்மீது டிஏபியும் பாஸும் சர்ச்சையிடுவதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என விரும்புகிறார்.
“இதற்கு பக்கத்தானுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும். பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டம் கூட்டப்படும்போது இவ்விவகாரமும் விவாதிக்கப்படுவது நிச்சயம்.
“பக்கத்தான் ரக்யாட்டின் பலமே ஒரு கருத்துடனும் ஒருமித்த முடிவுடனும் முன்னோக்கிச் செல்வதே. தனிப்பட்ட கருத்துகளுக்க்கு அங்கே இடமில்லை”, என சிலாங்கூர் மந்திரி புசாருமான அஸ்மின் கூறினார்.
பக்காத்தானின் உள்ளே நிறைய BN உளவாளிகள் புகுந்து விட்டனர்.இனிமேல் இந்த மக்கள் கூட்டணியில் சமரசம் என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்.
மாங்கா கூட்டனி அப்பு..ஒற்றுமை நிறைந்து வழிகிறது..
தேங்கா கூட்டனியில ஒருத்தன் உண்ணா விரதம்னு ஏமாத்துறான். இன்னொருவன் கட்சிய காப்பாத்துறேன் பேர்வழினு வாயை தொறக்க மாட்டேன் என்கிறான். இன்னொருத்தன் நான்தான் 90 கிளைகள் ஆதரிக்கும் தலைவன் என்கிறான் …..சாந்திக்கு ஒரு கிளை கொடுத்திருப்பார்கள் ……
இது சக்களத்தி சண்டை…அப்படி இப்படித்தான் இருக்கும். இது என்ன பாரிசான் அடக்குமுறையா, யாரும் வாயைத் திறக்கக்கூடாது ‘பெரியண்ணன் சொல்வதற்கு எல்லோரும் வாயை மூடி ‘ஆமாம் சாமி போடுவதற்கு..?