ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) 117-ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கு அரண்மனை பெயரைச் சொல்லி எதிர்ப்புத் தெரிவிப்பதன்வழி “நாட்டில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ண முயல்கிறது” என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் சாடினார்.
இஸ்மா, இனவாதப் பேச்சுகளின் மூலமாக மலேசியர்களின் ஒற்றுமையை உடைத்தெறிய முயல்கிறது என்றாரவர்.
சுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தைச் சுற்றுலா கவர்ச்சி மையமாக்கும் திட்டத்தால் ஓர் அரச நகரம் என்ற கிள்ளானின் மதிப்பும் மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்ற தோற்றமும் கெடும் என்று இஸ்மா கிளாங்கின் உதவித் தலைவர் பாதன் உசேன் கூறியதாக இஸ்மாடிவி அறிவித்திருந்தது பற்றி கணபதிராவ் கருத்துரைத்தார்.
நாட்டில் ஒரு இனம் அல்லது சமயம் மட்டும் இல்லை என்பதை அவர் இஸ்மாவுக்கு நினைவுறுத்தினார்.
இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ன முயலும் இஸ்மா போன்ற தரப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசாங்கம் “இரட்டை நியாயத்தை”க் கடைப்பிடிப்பதாகவும் அவர் ஆத்திரப்பட்டார்.
“1 ISRAEL” கொள்கை பாலஸ்தீனர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வர பட்ட கொள்கை. அக்கொள்கையை சிறிது மாற்றம் செய்து
“1 MALAYSIA” கொள்கை என்று கூறி பிரதமர் நஜிப் “ISMA” போன்ற எருமைகளின் மூலம் சிறுபான்மை மக்களை ஒடுக்க முயல்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது
இடம்விட்டால் மடம்பிடுங்குவார்கள்.இஸ்மா என்ற இனவாத கும்பல். இக் கும்பலை முளையிலேயே கிளளி
எறியவேண்டும்,விட்டுவிட்டால் நாட்டில் குளப்பம்தான் மிஞ்சும்.
சிறுபான்மையினரின் உரிமைக்கு எதிராக செயல்படும் இஸ்மா மீது தேச நிந்தனை சட்டம் பாயாதோ???? மாமனுக்கு ஒரு சட்டம் மச்சானுக்கு ஒரு சட்டமோ???
நாட்டின் இனங்களுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்ட இதுவும் ஒரு வழியோ! அதனால் தான் அரசாங்கம் “இரட்டை இலை” நியாயத்தைக் கடைபிடிக்கிறதோ!
உங்களுக்கு தெரியுது ……… அவனுகளுக்கு தெரியலையே ….. சட்டமா அதுவும் ……ரெண்டு ?????????????
இஸ்மா தடை செய்யப்படவேண்டிய ஒரு இயக்கம்.
மலேசியா ஒரு இஸ்லாமிய நாடல்ல என பெரும்பாலான குருமுட்டைகளுக்கு தெரியாது. Isma வை சோறு போட்டு வளர்ப்பதே அம்னோ தான்.அம்னோவின் பிடிக்குள் இருக்கும் தேசிய முன்னணிக்கு வாக்களித்தவர்கள், தங்கள் இனத்தையும், மதத்தையும் குழிதோண்டி புதைத்தவர்கள் ஆகிறார்கள். அதிலும் BN னுக்கு வாக்களித்த ஹிந்திக்களும், புத்த மதத்தினரும், கிருஸ்தவர்களும், தங்கள் மதத்திற்கு பெரும் துரோகம் செய்துவிட்டனர்.
அரண்மனைகளுக்கு மற்ற சமயங்களைப்பற்றி அக்கறை கிடையாது. மற்ற சமயத்தவர்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?
தம்பி கணபதி ராவ் அவர்களே! மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என எவராவது சொல்வாரேயானால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கவேண்டாம். மலேசிய ஓர் இஸ்லாமிய நாடு என எந்த சட்டப் புத்தகத்திலும் கிடையாது. கர்பால் சிங் மறைந்த பிறகு, அவர் இடத்தை நிரப்ப சரியான ஆளை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. முயலுங்கள்.
நம் நாட்டின் அதிகாரத்துவ மொழி மலாய்[official language]. அதேபோன்று நம் நாட்டின் அதிகாரத்துவ சமயம், இஸ்லாம் [official religion] ஆனால்,நாடு, இஸ்லாமிய நாடல்ல. எல்லா சமயங்களும் வழிப்பட அரச சாசனத்தில் எழுதப்பட்டுள்ளது. கிள்ளான்,அரச நகரம் என்பதால், ஆலயங்கள் அங்கே இருக்கக் கூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது.
மத பிரச்சனை கொண்டு வருபவர்களின் மீது ஏன் இன்னும் சட்டம் பாய வில்லை?என்ன காரணம்?
ஆலயம் பற்றி விமர்சனம் செய்த இஸ்மாவுக்கு கண்டனம் தெரிவித்தவர்களுக்கு நன்றி. இன்னும் சில நாட்களில் நடைபெறும் தைப்பூசத்தில் பக்தர்கள் என்ற போர்வையிலும் நேர்த்திக் கடன் செலுத்தும் பாவனையிலும் இந்து மதத்தை களவாணிக் கூட்டம் சந்தி சிரிக்க வைக்கப்போகிறதே, அதைத் தடுக்க என்ன செய்யப்போகிறீர்கள்.
டேய்,ஓவரா பேசாம மொத தைப்பூசத்த அடிச்சிகாம ஒழுங்கா கொண்டாடுங்கடா…பால், தேங்கா, சூடம், அலங்கார காவடி எல்லாம் நேர்த்திக்கடன் னு வீணா ஆக்கறத விட்டுட்டு ஏழைகளுக்கும் தமிழ் பள்ளிக்கும் நன்கொடை குடுங்கடா…அப்ப தான் இந்த இனம் உருப்படும்… தமிழ்க்கடவுள் முருகன் ஆசியும் கெடைக்கும்.
முஸ்லிம்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம்- அதை யாரும் கண்டுகொள்ளபோவதில்லை. ஆனால் அவன்களை பற்றி பேசினால் தேச நிந்தனை சட்டம் பாயும்.
உலகத்திலே நீங்கள் தாண்டா இன வெறி குழப்ப வாதிகள் .
பிறப்பும் இறப்பும் உயிரனங்களுக்கு உறுதி தயங்காமல் குரல் கொடுங்கள் .
மாண்புமிகு கணபதிராவ் அவர்களுக்கு..! உங்களது தலைமையில் கிள்ளான் நகர் காவல் நிலையத்தில் இஸ்மா அமைப்பின் மீது புகார் ஒன்றை செய்வோம் நாள் ஒன்றை குறிப்பிட்டு பொது அமைப்புகளுக்கும் அழைப்பு விடுப்போம்..!
பெருமாள் கல்கி அவதாரம் எடுத்து அவன்களை அழிக்கட்டும்.
கத்தி விஜய் > இதுவரை எத்தனை தமிழ் பள்ளிகளுக்கு வாரி வழங்கி உள்ளார் ? எத்தனை ஏழைகளின் கண்ணீரை துடைத்துள்ளார் ??
இந்துதர்மன்: பெருசா ஒன்னும் இல்லிங்கண்ணா…ஏதோ என்னால முடிஞ்சத மட்டும் செய்வேன் னா…செய்யறதையும் கணக்கு வெச்சிக்கறது இல்லிங்கண்ணா… நான் சொன்னதுல தப்பு இருந்தா மன்னிசிடுங்க னா…
கத்தி விஜய், நீங்கள் சிறுசா செய்தாலும் செய்கின்ற மனம் இருக்கிறதே அதற்கு நன்றி! சிறிதாக செய்துவிட்டு அதைப் பெரியதாக பத்திரிகையில் போடுகிறானே அரசியல்வாதி அவர்களைவிட நீங்கள் மேல்!
abraham terah : தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா…