போலீஸ் அதிகாரியாக தன் கடமையைச் செய்ததற்காக சிருல் அஸ்ஹார் உமர் “காட்டிக்கொடுக்கப்பட்டார்” என அவரின் தாயார் பியா சமட் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்டான்துன்யா கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் சிருல் விடுவிக்கப்படுவார் என்று அவரது குடும்பம் நம்புகிறது. பியா,74, இதைத் தெரிவித்ததாக பாஸ் கட்சி செய்தித்தாளான ஹராகா டெய்லி கூறிற்று.
“என் வருத்தத்தை அந்த ஆண்டவனே அறிவார், சிருல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள மட்டுமே என்னால் முடியும்”. பாஸ் தலைவர்கள் பலர் இன்று தைப்பிங்கில் உள்ள சிருலின் வீட்டுக்குச் சென்றபோது அவரின் தாயார் இவ்வாறு கூறியதாக அச்செய்தித்தாள் தெரிவித்தது.
அல்டான்துன்யா கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டபோது சிருல் நீதிமன்றம் வரவில்லை. அவர் இப்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார்.
எது எப்படியோ,அல்த்தாந்துயா கொலைக்கு உண்மையான காரணகர்த்தாக்களை பிடிக்கும் தகுதியோ, திறமையோ இந்த நாட்டு லஞ்ச,லாவண்யா அரசிற்கு எள்ளளவும் கிடையாது என்பது உலகறிந்த விஷயம்.
அல்தான்துன்யாவை வெடி வைத்து கொல்லும் கடமையை போலீஸ் அதிகாரியான சிருலுக்கு உத்தரவு தந்தது யார் என்று கூறவில்லை மற்றும் யாரால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என்றும் கூறவில்லை,ஆகவே “காட்டிக்கொடுக்கப்பட்டார்” என்பதை எப்படி நம்புவது ?
ஆ …ஊ … ன்னா, ஆண்டவனே அறிவார் என்று கூறி தப்பித்து கொள்ளும் யுக்தி மலேசியாவில் மட்டுமே கடைபிடிக்கபடும் மலேசியாவின் சிறப்புகளில், அதாவது ஆளும் BN அரசாங்கத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.
எல்லாம் அவன் செயல்– வெள்ளிடை மலை.
அடாடாடா டா…அல்தான்துன்யா பத்தினி பெண் மரணத்தில் நம்மவர்களுக்கு என்னமா அக்கறை..
பொது இடங்களில் மற்றவர்களை ஆரத்தழுவி அணைத்து சுயஇன்பம் காண்பவர்கள், அது மகன் பாசம், சகோதரர் பாசம், மச்சான் பாசம் என்ற வியாக்கினத்திற்கு ஆதரவாளிக்கும் மர முண்டச்சிகளே !!!
இப்போது முந்தானை விரித்திருப்பது இரண்டாவது கணவர்தானே !!!
அதென்ன மற்றவர்களை பத்தினியா என்று கேலி செய்வது ???
சாந்தி பெண் அல்ல என்பதை வாசகர்கள் எல்லோரும் அறிந்த ஒன்றுதான் > இருந்தாலும் கொடூரமாய் கொல்லப்பட்ட மங்கோலிய அழகியின் சுய வாழ்கையை விமர்சனம் செய்வது அழகல்ல !! இந்த கொலையால் உலகமே நம் வழக்கு போக்குகளை கூர்ந்து பார்த்து வருகின்ற நிலையை அறிதல் வேண்டும் – அரசாங்கம் தீவிரமாய் இந்த வழக்கை நேர்மையாக நடத்தி முற்று புள்ளி வைக்காமல் நாட்டின் மீதுள்ள களங்கத்தை அழிக்க இயலாது என்பது யதார்த்தம் !!!
பத்தினியில்லாத பெண் கூட யார் சல்லாபம் வைத்துக் கொள்ளச் சொன்னது?. முதல்ல கணவருக்கு இனித்தது, பின்னர் மனைவிக்கு கசந்ததோ?. என்ன அசாந்தியான ஞாயம் பேசுகின்றீர்.
அல்தாந்துயா மலேசியாவில கொல்லபட்டாரா ? அவர் மலேசியாவுக்குள் வந்த தடயம் ஏதும் இல்லை என்பது போல் ஆரம்ப சாட்சியங்கள் இருந்ததே ? ஊடங்கங்கள் வெளியிட்ட தவறான தகவலா ??
கூல் நண்பர்களே ..உண்மை கசக்கத்தான் செய்யும்..