பிப்ரவரி 10-இல், பக்கத்தான் ரக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம் குற்றவாளி எனத் தீர்ப்பாகி உள்ளே போய்விட்டால் பாஸ், டிஏபி உறவுகள் படுமோசமாகி விடும்.
அம்னோவும் பாஸும் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்கும் சாத்தியம் பற்றிக் கருத்துரைத்தபோது மசீச இளைஞர் தலைவர் சோங் சின் வூன் இவ்வாறு கூறினார்.
“முன்பு அப்படி நடந்ததுள்ளது. மறுபடியும் நடக்கலாம்.
“இப்போது அதற்குத் தடையாக இருப்பவர் பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அப்துல் அசீஸ். அவர் அதை(ஒற்றுமை அரசாங்கத்தை) எதிர்க்கிறார்.
“அன்வார் சிறைக்கு அனுப்பப்பட்டால் கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முக்கியமானவரை பக்கத்தான் இழந்துவிடும்.
“பாஸும் டிஏபியும் பிரியலாம். அப்போது அம்னோவையும் பாஸையும் கொண்டு கிளந்தானில் இன்னொரு கூட்டணி அமைக்கலாம்”, என்று சோங் கூறினார்.
அப்படியே PAS உடைந்தாலும் உடையாவிட்டாலும் அன்வார் அவர்களை இஸ்டத்துக்கு ஜெயிலுக்கு அனுப்ப முடியாது ,,,
இனி இந்தியர்களின் தலைவிதியை முடிவு செய்ய யாருமில்லை .சிஆன்னும் மலாய்க்காரனும் முடிவு செய்யட்டும்
அன்வார் சிறைக்கு போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, பாஸ் கட்சி உடைவது நிச்சயமான ஒன்று. பாஸ் என்ற பெயரில் ஒன்றும், பாஸ்மா என்ற பெயரில் ஒன்றும் இயங்கும். பாஸ் கட்சி அம்நோவுடன் கூட்டு சேரும் சாத்தியம் உள்ளது. அம்நோவுடன் சேர விரும்பாதவர்கள், பாஸ்மா வில் இயங்குவார்கள். ஆக, பழையபடி மூன்று கட்சிகளின் கூட்டணி தொடர்ந்து இருக்கும். ஆனால் பழைய தெம்பு இருக்குமா என்பது சந்தேகமே. PSM கட்சி, மக்கள் கூட்டணிக்கு ஆதரவு என்றாலும், பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடும். வருத்தமான செய்தி என்னவென்றால், அடுத்த பொதுத்தேர்தலில் பெரும்பாலான மலாய்க்காரர்களின் வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு வரும் சாத்தியம் இல்லாததால், பக்காத்தானுக்கு பேரிடி தவிர்க்க முடியாதது.
அப்படி அன்வர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்தால் என்ன நடக்கும் என்று நீங்களே கூரினல் நன்றாக இறுக்கும் மசிச இளன்ஜர் பிரிவு தலைவர் அவர்களே ,!!!!!!!
நீதி என்றுமே ஜெய்க்கும்…
இப்ப மட்டும் என்ன பாசம் பசையாய் பற்றி பிழியுதோ? சம்பானில் அங்கே ஓட்டனா இங்கே ஓட்டை இப்படி திருப்பினா ஓடம் ஒரு பக்கம் துடுப்பு சுத்தல்கள் மறு பக்கம். யப்பா ?
மூன்று மந்தி பார்க்கிற மாதிரியே இருக்குது அப்பு,..
பாகாதான்ல என்ன நடந்தால் என்ன ? தமிழனக்கு இவங்கள் ஆப்புதான் அடிப்பானுங்க? இதுவரை தமிழன் தனியாதான் முன்னேறுகிறார்கள். ஒரு சட்ட மன்ற மயி… ஒன்னும் செய்யல ? குப்ப ,பள்ளிகூட ஓட்ட ,கோவில் உடைச்சல், டெங்கி கொசு , பொங்கல் ,தீபாவளி பொட்டலம்,ஒருத்தனுக்கும் அரசியல் விவேகம் தெரியில !
பாகாதான்ல ஒரு தமிழன் பிரதநிதி இல்லை ? மாநில வளர்ச்சியில் வணிக பங்கு இல்லை? GLC ல் கோசம் MP கள் adun கள் பதவி எடுத்து அரசியல் சை..ன்கள் காசுக்கு கோசமிடும் கூட்டமாக ? பத்திரிக்கை செய்திக்கு காசு கொடுத்து அரசியல் நாடகம்.? முண்டங்களாக பொது நிகழ்வுகளில் புத்தி செல்லிபுட்டு ஓடி ஒளியும் நரிகளாக ? அரசியல் உரிமை பேசுபவர்களை ஒதுக்குவது? தமிழனடா என்றால் இந்தியன் என்கிறான்? இந்தியன் என்றால் மலேசியன் என்கிறான்.? பல்லினம் என்கிறான் IS என்கிறான் ? இன ஒற்றுமை ஓராங் ஊத்தான் என்கிறான்? ஷரியா,ஹுடுட், சிவில் என்கிறான் பைத்தியம் பிடிச்சி படுக்க போட்ட பின் வந்து பார்த்து அங்கும் அரட்சியல் பேசுறான்?
யாருக்கோ என்னவோ எதிர்பார்த்தது கிடைக்கவில்லை போலும். இப்படி பொரிந்து தள்ளுகிறார்.
பாவம் பொன் ரங்கன் > எதோ 2007 கு முன் இந்தியர்கள் எல்லா உயர்நிலை பதவியை அலங்கரித்த மாதிரியும் > 10 இந்திய மந்திரிகள் பார்லிமெண்டை கலக்கி > இந்தியர்களை உலக மஹா பணக்காரர்கள் ஆக்கியது போலவும் ஆர்பரிப்பது வீண் !!
தேர்தல் வரும் போது எல்லாரும் ஒட்டிக்கொள்ளுவார்கள்!
பாவம் பொன் ரங்கன் > எதோ 2007 கு முன் இந்தியர்கள் எல்லா உயர்நிலை பதவியை அலங்கரித்த மாதிரியும் > 10 இந்திய மந்திரிகள் பார்லிமெண்டை கலக்கி > இந்தியர்களை உலக மஹா பணக்காரர்கள் ஆக்கியது போலவும் ஆர்பரிப்பது வீண் !!
பொன் ரங்கன்…உங்கள் கருத்தை நான் லைக் பண்றேன்..
பொன்.ரங்கன் முன்பு தங்களின் கருத்தை வெட்டி மாற்றுக் கருத்தைப் பதிவிட்டுள்ளேன். இன்றைக்க தங்களுடைய 28/1/15 ம் நாள் பதிவிட்ட கருத்திற்கு உடன்படுகின்றேன். எல்லா போலியான கட்டுகளிலிருந்தும், போலி கலை,கலாச்சார, மத, இன, மொழி திருகு தாளங்களிலிருந்தும் தமிழன் விடுபட வேண்டும். படிப்பதற்கும், சிந்திப்பதற்கும் தமிழன் நேரம் ஒதுக்கினால் நம்மைப் பிணைத்திருக்கும் எல்லா கட்டுகளும் உடைபட்டு சிதறுண்டு போகும்!