பினாங்கில் ஊராட்சித் தேர்தல் நடத்துவதுமீது இரு கட்சிகளின் நிலைப்பாடு பற்றி நேருக்குநேர் விவாதிக்க வருமாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்டபா அலி, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்குக்குச் சவால் விடுத்துள்ளார்.
டிஏபி பினாங்கில் ஊராட்சித் தேர்தல் நடத்துவதற்கு பாஸ் இணக்கம் தெரிவித்ததாக லிம் கூறுவது “பொய்” என்று முஸ்டபா இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பாஸ் அதற்கு என்றும் இணக்கம் தெரிவித்ததில்லை என்கிறது. ஆனால், பாஸுக்கு அது பற்றி முன்பே தெரியும் என்று டிஏபி வாதிடுகிறது.
“பொதுவில் என்னை நேருக்கு நேர் சந்திக்க வரும்படி அவருக்குச் சவால் விடுகிறேன். அவர் அவரின் தரப்பை எடுத்துச் சொல்லட்டும். நான் என் தரப்பை எடுத்துரைப்பேன்.
“பொய் சொல்வது யார் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்”, என முஸ்டபா கூறினார். அப்படியானால் லிம்முடன் விவாதமிட விரும்புகிறாரா என்று வினவியதற்கு முஸ்டபா பதிலளிக்கவில்லை.
உங்களின் சுய ரூபம் தெரிந்துவிட்டதே செலங்கூறில் .இன்னுமா உங்களை நம்ப வேண்டும். இந்தியர்களையும் சினர்களையும் ஓரங்கட்டி மலைய்காரர்களை கொண்டே ஆட்சி அமைக்க போட்ட திட்டம் எங்களுக்கு தெரியாத .
சும்மா சொல்லக் கூடாது. பக்காத்தானை நல்லாவே கூறு போடுகிறீர்கள். உங்களை நம்பிய எங்களை நடுத்தெருவுக்கு இழுக்காமல் விடமாட்டீர்கள். பக்காத்தான் அங்கத்தினர்களே! ஹாடி அவாங், அன்வார், லிம் குவான் எங் போன்ற சந்தற்பவாதிகளை மூட்டைக் கட்டி வீட்டுக்கு அனுப்புங்கள். புதிய, நம்பிக்கைக்கு உரியவர்களை இடம்பெறச் செய்யுங்கள். இல்லையேல் பக்காத்தானுக்கு சங்குதான். ஆட்சி வெறியர்களும், இன வெறியர்களுமான அம்நோவினருக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
“நேரு”க்கு நேர் சந்தித்தாலும் சரி
“காந்திக்கு ” நேர் சந்தித்தாலும் சரி
பாக்காதான் உடைந்தால்
லாபம் பாரிசனுக்கே என்பது மட்டும் திண்ணம் !!
உங்களின் வரவுக்காக பாடு பட்ட உங்களின் கட்சிகாரர்களை
நடு ஆற்றிலா விடுவீர்கள் ???
இத இத தாண்டா …நாங்க சொல்றோம்..அப்புறம் நாட்டை கூரு போற்றுவணுங்க இந்த மாங்கா கூட்டனி மக்கைகள்…
நீங்க எப்படி வேண்டுமானாலும் சவால் விடுங்க ,அடுத்த பொது தேர்தலில் உங்களுக்கு ( PAS ) ஒட்டு கிடையாது ,நல்ல வேலை உங்கள் சுய ரூபம் தெரிந்து விட்டது .