உள்துறை அமைச்சு, அதன் நிகழ்வுகளிலும் அதன் அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் செய்தி சேகரிக்க மலேசியாகினிக்குத் தடை விதித்துள்ளது.
இன்று காலை மலேசியாகினி மற்றும் கினிடிவி செய்தியாளர்கள் ஒரு நிகழ்வுக்குச் சென்றபோது அமைச்சரின் உதவியாளர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
“ஒருதலைச் சார்ந்த செய்திகளாக போடுகிறீர்கள்.
“நாங்கள் சொன்னதைத் திரித்தும் கூறுகிறீர்கள். இதனால் எங்கள் பெயர் கெடுகிறது”, என்றாரவர்.
மலேசியாகினியில் வெளியிடப்படும் செய்திகளை உள்துறை அமைச்சு அணுக்கமாகக் கவனித்து வருவதாகவும் அதனால்தான் அதற்கு அந்நிகழ்வுக்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை எனவும் அவர் சொன்னார்.
இவ்வாரத்தில், மலேசியாகினி அரசாங்க நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க முடியாதபடி தடுக்கப்படுவது இது இரண்டாவது தடவையாகும்.
“”ஆரத்தழுவி அணைத்து சுயஇன்பம்”” காணும் நிகழ்ச்சி இருக்குன்னு சொல்லிட்டு போங்களேன், இதற்குபோய் “ஒருதலைச் சார்ந்த செய்தி / திரித்து கூறுகிறீர்கள் / பெயர் கெடுகிறது” என்று கூறி நேரத்தை வீணடிக்குகிறீர்களே.
உண்மையை சொன்னால் நொல்ல கண்ணுக்கு பிடிக்காது .