எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பு நாள்(பிப்ரவரி 10) நெருங்கி வரும் வேளையில் பிகேஆர் நாடு முழுக்க தொடர்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரி 1 தொடங்கி தீர்ப்பு நாள்வரை 10 வெவ்வேறு இடங்களில் அக்கூட்டங்கள் நடத்தப்படும் என பிகேஆர் எம்பி ஜொகாரி அப்துல் கூறினார்.
“இதுவே, அவர் (அன்வார்) கட்சித் தலைவர்களையும் ஆதரவாளர்களையும் சந்திப்பதற்குக் கடைசி வாய்ப்பாகவும் இருக்கலாம்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இக்கூட்டங்கள் நாட்டின் நிலவரத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் மேடைகளாகவும் அமையும் என ஜொகாரி கூறினார்.
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம், ரிங்கிட்டின் மதிப்புக் குறைந்தது போன்ற விவகாரங்கள் பற்றி அக்கூட்டங்களில் பேசப்படும்.
புலி வருது, புலி வருதுன்னு மங்கிக் கிடக்கின்ற கட்சியின் உறுப்பினர்களை உசுபேத்த போடுகின்ற நாடகமோ என்ற டவுட் வருது.
கதை முடிஞ்சது…