மலாக்காவில் 90 விழுக்காடு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள 7-11 கடைகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கும் மாநில அரசின் முடிவை கெராக்கான் இளைஞர்கள் எதிர்க்கிறார்கள்.
மாநில அரசின் புதிய கொள்கை வர்த்தகத்தில் அரசியல் குறுக்கீட்டைக் காண்பிக்கிறது எனக் கூறிய அப்பிரிவின் தலைமைச் செயலாளர் வில்லியம் சாங், அந்தத் தடை விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
முஸ்லிம்- அல்லாதாரும் சுற்றுப்பயணிகளும்கூட பொருள் வாங்குவதற்கு அக்கடைகளுக்குச் செல்வதை மாநில அரசு எண்ணிப் பார்க்க வேண்டும் என்றாரவர்.
“தடைவிதிப்பு முஸ்லிம்-அல்லாதாரின் உரிமைகளை மறுப்பதாகாதா?”, என்று சாங் வினவினார்.
தண்ணி அடிச்சது போதும்
… வேலைய கவனிங்கடா
மதுவையும் ,சிகரட்டியும் ,சூதாட்டமும் ,நிறுத்தினால் மலேசியா திவாலாகிவிடும் ,உம்னோ காரங்கள் இஸ்லாம் நாடு என்கிறான்கள் இதை இவன்களால் நிறுத்த முடியுமா ??????????
இதை நாடு முழுவதும் செய சொலுங்க பார்போம் ?உம்னோ அரன்சன்கம் அவளவுதான்.
குடிப்பவனே அவனுங்கதான் புப்புலே போயி பாருங்கடா மலாய் காரணங்க பண்ணும் கூத்தை