நஜிப் ரசாக் 2009 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற போது இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான இடைவெளியை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
ஆனால், அவரின் ஒரே மலேசியாவில் இப்போது மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பிளவு பெரும்பாலும் இன மற்றும் சமய அடிப்படையில் ஆனதாகும்.
பிரதமர் நஜிப் சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக இருப்பதால் அது ஒரு பயனற்ற நடவடிக்கை என்று நெகாரா-குவின் புரவலரும் வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் ஆராய்வு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நஜிப் மலேசிய இந்தியர்களை “இம்மண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள்” என்று வர்ணித்திருந்தது பற்றி அவரது கருத்து கேட்கப்பட்டது.
“அனைத்து இன மலேசியர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் அவை கவனிக்கப்படுவதில்லை. இனம் மற்றும் சமயம் பற்றிய பிரச்சனைகள் காரணமாக அவர்கள் தாங்கள் குடிமக்களாக நடத்தப்படவில்லை என்று கருதுகிறார்கள்”, என்று அம்பிகா கூறினார்.
இடதுசாரிகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி விரோத மனப்பான்மைக்கு தூபமிடுகின்றனர். மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியர்கள் எதிர்கொண்டுள்ள கடுமையான பிரச்சனைகள்
மலேசிய இந்திய சமூகம் பற்றிய நஜிப்பின் உரையை எந்த அளவுக்கு மலேசிய ஊடகங்கள் வெளியிடும் என்பதைக் காண தாம் விரும்புவதாக அவர் கூறினார்.
அடிமட்டத்தில், இந்திய மலேசியர்களின் உளப்பாடு வேறுபட்டது. (நஜிப் கூறியது போல) அவர்கள் அப்படி நடத்தப்படவில்லை. அவர்கள் ஏன் அப்படி கருதவில்லை என்பதைக் கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.
“ஏன் அதிகமான இளைஞர்களிடையே வாய்ப்பின்மை என்ற உணர்வு மேலோங்கியுள்ளது? ஏன் இந்த அதிகமான அளவிலான குண்டர்தனம்?”
“அதிக அளவிலான இந்திய தடுப்புக்காவல் கைதிகளின் மரணம் மற்றும் இது போன்றவை அலட்சியப்படுத்தப்படுவதின் விளைவாக இச்சமூகம் கடுமையான சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது”, என்று அம்பிகா கூறினார்.
உலகம் ஒரு நாடக மேடை. நஜிப் ஒரு கதாநாயகன்.
இன்று தமிழ்ப்பத்திரிகைகளை பெரிதாக அலங்கரித்திருப்பது இந்த ‘ மண்ணின் மைந்தர்கள்’ தான். பெரிதாகப் பிடித்து வாயில் ஆப்பு வைத்ததை அறியாத சிறுபிள்ளைகள் நம் பத்திரிகையாளர்கள். தலைவர்கள் என்ன சொன்னாலும் அப்படியே நம்பிவிடும் கைக்குழந்தைகள் அவர்கள். இப்படிப்பட்ட செய்திகளைப் போட்டால் சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து ஏதாவது கிடைக்காதா என்கிற எத்ர்பார்ப்பு. – பத்திரிகை நடத்தவே தகுதியற்றவர்கள்.
இந்தியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்றால் சீனர்கள்? ….பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையயும் காட்டுபவர்கள் அரசியல்வாதிகள். முடிந்தால் 31-8-1957-க்குப் பிறகு இந்த நாட்டில் பிறந்த அனைத்துக் குழந்தைகளும் பூமிபுத்ராக்கள் தான் என்கிற அந்தஸ்தும் அனைத்து சலுகையும் தரவேண்டும் என்று தலையங்கம் எழுதும் துணிச்சல் எந்தப் பத்திரிகையாளனுக்காவது உண்டா? அல்லது அதை நாடாளுமன்றத்தில் கேட்க எந்த அரசியல்வாதிக்காவது முதுகெலும்பு தான் உண்டா? இப்படிப்பட்ட ‘அல்வா’க்களையும் ‘ஜிலேபி’களையும் கொடுத்தே நம்மை 58 ஆண்டுகளாக ஏய்த்துவிட்டார்கள்.. இந்னும் ஏமாறத்தான் வேண்டுமா..நாட்டுக்காக ரத்தம் சிந்திய, பொருளாதாரத்தில் பிந்திய…என் இனிய இந்திய சமுதாயமே சிந்தித்துப்பார்…!!!!!
பலவான் சரியாக சொன்னீர் ….!
போச்சிடா …
நம்மை கிண்டல் பண்ணுவதற்கு நஜிப், தமிழன் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டைப் பயன் படுத்திக் கொண்டார்! நம்மை எங்கே எவன் கிண்டல் பண்ணினாலும் அதனைப் பெருமையாக நினைப்பவர்கள் நாமாகத்தான் இருக்க முடியும்!
ஓர் உண்மை புரிகிறது. அன்மோ காரன்கள் நம்மை எளிதில்நம் முட்டால்கலாக்குகின்றனர். நம் நிகழ்ச்சிகளுக்கு வருவது, முடித்தாள் நம்முடிய பாரம்பரிய ஆட்களை அணித்து கொள்வது. இரண்டு வார்த்தை டமிலில் பேசுவது. அதற்க்கு மடை இ கா தலைவன்கள் தலையை ஆட்டி கைகளை தட்டுவது. பிறகு நாமெல்லாம் மலேசியர்கள் என்று புழுகுவது. இந்தியர்கள் இந்நாட்டிற்கு உழைத்திருக்கிறார்கள் என்று நீலிக் கண்ணிற் வடிப்பது. நமக்கு எல்லாமே தரப் படுகிறது என்று கூவுவது. அதையும் கேட்ட பின்பு மேலே சொன்ன தலைவன்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்வது. ஆனால் இது வரை எனக்கு தெரிந்து நம்மை பற்றிய அம்னோ காரன்களின் புகழ்ச்சி எந்த மலாய் ஊடகங்களில் வந்ததாக ஞாபகம் இல்லை. அவ்வளும் நாடகம் பட்ச்சை நடிப்பு. அதற்க்கு கூஜா இந்த மா யீ கா காரன்கள்.
நம்ம இளிச்சவாய் கூட்டம் . பலவான் உங்களுக்கு 100% புள்ளிகள்.
மண்ணின் மைந்தர்களே என்பது உண்மையா? அப்படியானால் குடிஉரிமை மற்றும் பிறப்பு பத்திரங்கள் வழங்குவதில் பாரபட்சம்?
பலவான் , உங்களுக்கு ரொம்ப ஆசைதான்.மண்ணின் மைந்தர்கள்’ எல்லாம் வேண்டாம்.
நம்ம மனிதனாக மதிக்கட்டும். நம்ம பிள்ளைகள் சரிசமமான கல்வி வாய்ப்பு கொடுக்கட்டும். தமிழ் பள்ளிகள் பள்ளியாகாஇருக்கட்டும் பன்றி கொட்டகையாக அல்ல. பல்கலைகழக வாய்ப்புக்காக நாய் போன்று அலைய வைக்காதிங்க. சிறுபான்மையான எங்களை சிறுமை செய்யாதிங்க! ISMA & PERKASA வை பயன்படுத்தி எங்களை முட்டாள் ஆக்காதீங்க !
பெரு மதிப்பு உரிய பிரதமர் அவர்களே, திருமறை “QURAN ” சொன்ன மாதிரி உண்மையாக இருங்க ! எங்களையும் நேசிங்க! எங்களுக்கும் உரிமை கொடுங்க! நாங்க இந்த ஊரின் பிரஜை!. பொய் பேசாதிங்க! இது எங்களின் அவல குரல்.
எனது இந்திய சகோதரர்கள் தயவு செய்து சுய நலதுக்கு இடம் கொடுத்து இவர்களுக்கு ஜால்ரா போடதிங்க! மன சாட்சிக்கு உண்மையாக இருப்போம் .
‘
பெரியண்ணன் சின்னண்ணன் சொன்னா கேட்டுக்கினும்மள…?
தமிழ்ப்பத்திரிகை சகோதரர்களே பிரதமர் சொன்ன காமெடி செய்தியை முழுதாக நம்பி ,தலைப்பு செய்தியாக போட்டு எங்களுக்கு அல்வா கொடுக்காதிங்க . நம்ம ரொம்ப பேருக்கு இனிப்பு நீர் வியாதி வந்திடுச்சு!
வருமானவரி எல்லா இனங்களும் கட்ட வேண்டும்.நிலவரி எல்லா இனங்களும் கட்ட வேண்டும்.சுக்கை பிந்து எல்லா இனங்களும் கட்ட வேண்டும்.வாகன வரி- சாலை வரி எல்லா இனங்களும் கட்ட வேண்டும்.இந்த வரிகளின் மூலம் அமுக்கப்படும் லாபங்கள் அனைத்தையும் சட்டத்தின் மூலம் ஒரே இனத்திற்கு சலுகையாக தாரை வார்த்து கொடுக்கப்பட்டால்,அதற்குப் பெயர் என்ன? இனபாகுபாடுதானே? இந்த நாட்டின் மேம்பாட்டுக்காக உழைத்தவன் நடுத்தெருவில் நிற்கிறான்.சோம்பேறியாக உட்கார்ந்து தின்பவன் சொகுசாக பங்களாக்களில் படாடோபமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான்.இதுதான் இன்றைய “சத்து மலேசியா”.
அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் இந்நாட்டின் மண்ணின் மைந்தர்கள் ,நாம் புமிபுத்றாக்கள் கூட என்னாஒரு வித்தியாசம் நாம் இஸ்லாமியர்கள் இல்லை .
தமிழ் ஆராய்ச்சி ….
மாநாடு நாடத்தி …..
வாக்கு சேகரிக்கும் …..
உத்தி பாராட்டுக்குரியது ..!!!
வாழ்க சத்து மலேசியா !!!!
நஜிப் நம்பிக்கை வெற்று வாக்குறிதியில் இதுவும் ஒன்று.
1 மலேசியா ஹா.. ஹா … ஹா இவ்வாண்டின் மிகச் சிறந்த கோமாளித்தனமான நகைச்சுவை.. பலவான் சொன்னது போல, பத்திரிகையாளர்கள் இது போன்ற மூடத்தனத்துக்கு பலியாகாமல் நன்கு சிந்தித்து சீர்துக்கிப் பார்த்து தமிழ் உணர்வோடு செய்திகளை பிரசுரிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.. .அம்னோ போடும் தீனிக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தை பலிகடாவாக்காதீர்கள். எம் தமிழ் சமுதாயமே ! தயவு செய்து நம் சந்ததியை நினைத்து இது போன்ற முட்டாள் தனங்களுக்கு விலை போகாமல் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பாடு அடைந்து வெற்றி நடை போடுவோம்.வாழ்க தமிழ். வளர்க தமிழ். ஓங்குக தமிழர் புகழ்.
“போச்சிடா …” என்று சாந்தி எழுதியுள்ளார். அப்படியென்றால் மானம் போச்சிடா இந்த தேங்க கூட்டனியொட என்றா பொருள் கொள்வது? அளவா பொய் சொல்லலாம் அல்லது அநியாயத்துக்கும் பொய் சொல்லலாம். ஆனால் பொய்யிலேயே அல்வா கிண்டி, பொய்யான கரண்டியிலே அள்ளி உண்மையாக தருகிறோம் என்று சொல்லுவது தான் தேங்கா கூட்டனி.
satu malaysia கோட்பாடு, இந்தியர்களையும்,சீனர்களையும்குஷிபடுத்துவதற்குமட்டும் அல்ல,sabah,sarawak,மக்கள் அவர்களின் நாட்டை umno விடமிருந்து தனி நாடாக பிரித்து கொடுக்கும்படி போராடிவருகின்றனர், அந்த பயம்தான்.இன்றைய எண்ணிக்கை,இந்தியர் சீனர்களை விட indon,bangla,myanmar வந்தேரிகளின் எண்ணிக்கை ஐந்துமடங்கிற்கும்மேலாக அதிகரித்துள்ளது,ஆதாரத்திற்கு langkawi,taman nilam என்று 500 வீடுகள் taman வீடுகளை இலவசமாக myanmarகாரர்களுக்கு bumiputra என்ற உரிமையில் வழங்கிஉள்ளது,bukit malut Lkwi,எண்ணிக்கையில் அடங்காதவார்கள் மியன்மார்காரர்கள்,இதுபோல ஒரே ஒரு வீடாவது ஒரு இந்தியருக்கு கட்டிகொடுத்திருக்கா BN ? இதுபோன்று பலஉரிமைகளை நாடுமுழுவதும் வாழ்நாளில் இழந்துவிட்டோம் அன்றே சொன்னார் ஏன்? என்ற கேள்வி கேட்காமல் வாழ்கை இல்லை என்று,ஆகையால் இரும்பு பெண்மணிஅம்பிகாவிற்கு இந்தியர்கள் ஆதரவு வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்.இல்லையேல் ஒவ்ஒரு தேர்தலின் சமையத்தில் ஆட்டுக்கறி உணவும் ஒரு போட்டலமும்தான்.
அறிவு சார்ந்த செம்பருத்தியின் ஆயிரம் கணக்கான வாசகர்களே , உங்கள் நிலைபாட்டையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.உங்களின் நிலைப்பாடு நாங்கள் முன்னோக்கி போவதுக்கும் பின்னோக்கி இருப்பதுக்கும் உதவியாக இருக்கும். மௌனம் காத்து இருந்தால் இன்னும் மோசம் போவோம். இது உறுதி. .மாற்றம் வேண்டுமானால் நாம் முதலில் மாற வேண்டும். Yes அல்லது NO என்று சொல்லுங்க. நன்றி.
இதை நான் ஒத்து கொள்கிறேன்.
பத்துமலை தைப்பூசத்திற்கு வேட்டிக் கட்டிக்கொண்டு வருவார் நஜிப். பெரிய மாலை போடுவார்கள் ‘பக்தர்கள்’. அதன் பலனாக, அடுத்த பொதுத்தேர்தலின் போது ஆட்டிறைச்சியும், பொட்டலமும் கிடைக்கும் ‘பக்தர்களுக்கு’. இந்த ‘குருட்டு பக்தர்களுக்கு’ ஒரு சவால். ‘இனிமேல் இந்நாட்டு இந்திய வம்சாவளியினரும், இந்நாட்டு மலாய் வம்சாவளியினர் போலவே அவர்களும் பூமி புத்திரர்களே’ என்று இந்த ‘பக்தர்கள்’ நஜிப்பை சொல்ல வைத்தார்களே யானால் என் காதை அறுத்துக் கொள்கிறேன்.
நசிப்பு பேசுவான் ஆனால் அது கோச டப்பா பேசுவதற்கு சமம் சும்மா மக்கள் தமிழன் எல்லாம் MIC காரண போல மாங்கா மடயனுங்கனு நினைத்து பேசியிருக்கான்
என்ன , தமிழர்கள் மண்ணின் மைந்தர்களா? பெர்காசா இன்னும் இதைக் கேட்கவில்லையோ ? இஸ்மா இன்னும் கேட்கவில்லையோ? ம.இ.க. வின் தலைவர் இதைப் பற்றி என்ன கேட்பாரோ?
நல்ல ஜோக்கு போங்கோ………!
சிங்கம், காதை அறுக்க சவால் விட வேண்டாம் . கழுத்தை அறுக்க கூட சவால் விடுக்கலாம். அப்படி ஒன்று நடக்க போவதில்லை. அப்படி எல்லாம் risk எடுத்து நஜிப் ஓட்டு கேட்க போவதில்லை. நாம் ஏமாளிகள் என்பது தேசிய முன்னணிக்கு தெரியும். தேசிய முன்னணியை மாற்றவோ மாறவோ நாம் தயராக இல்லை. ஒருமுறை மக்கள் முன்னணிக்கு வாயுப்பு கொடுக்க
நம்மில் பலருக்கு மனம் இல்லை. இப்பொழுது சொல்லுங்க! அவர் முட்டாளா ? அல்லது நாம் முட்டாளாக இருக்கிறோமா ? தேவை இல்லாம நஜிப் மேல கோபாம் வேண்டாம். அந்த நேரத்துல மங்கி இத்துபோன காங்கரஸ் காரங்க நமக்கு எதிரா போடுற ஜால்ரா இருக்க தாங்க முடியாது ! எல்லாதுக்கும் மேல ! எல்லாவற்றிக்கும் நல்ல பதில் பண சாச்சிதாங்க. ஐயோ தப்பா சொல்லிட்டேன்!
உண்மையான மனசாட்சியே நம்மையும் நம் எதிர்கால குழந்தைகளையும் காப்பாற்றும் !
பத்துமலை முருகா நடராஜாவை மட்டும் காப்பாற்றாமால் அடுத்த் தேர்தலில் எங்களையும் மறக்காமல் காப்பாற்று !
சந்தர்பவாதிகள் பச்சோந்தியைப்போல் இடத்திற்கு இடம் நிறத்தை மற்றுவதைபோல் நடித்துக்கொண்டேதான் இருப்பார்கள் அதற்க்கு பகல்வேஷக்கரர்கள்பல்லிளித்துக்கொண்திருப்பார்கள் நாம்தான் உஷாராக இருக்கவேண்டும் !
பிரதமர் சொல்வதை அப்படியே மொழிப்பெயர்த்து எழுதுவதுதானே இப்போதைய தமிழ் பத்திரிகையாளர்களின் தொழில். குறுக்கு கேள்வி ஏதும் கேட்க மாட்டார்கள்…அப்படியே சமுதாயத்தின் உரிமையைப்பற்றி கேள்வி ஏதும் கேட்டால், ஆப்புதான்!!!! பாவம் வயிர் பிழைக்க என்னதான் செய்வார்கள்?? அவர்கள் குடும்பமும் பிழைக்க வேண்டுமல்லவா??? பத்திரிகை பிரசுரிக்கும் உரிமம் அரசாங்கத்தின் பிடியில். உண்மையை எழுதினால் உரிமம் பறிபோகும் நிலை. உண்மை நிலவரம் அறிந்த அன்பர்களே உரிமைக்கு கர்ஜிக்கும் உங்கள் குரல் ஒலி நமது மற்ற அன்பர்கள் காதிலும் விழச் செய்யுங்கள். ஒன்று இரண்டாகும். இரண்டு நான்காகும். தொடர்ந்தால் மாற்றம் வெகு தொலைவில் இல்லை!!!!!.
சிற்றெரும்பு சரியான நேரத்தில் சரியான இடத்தில் கடித்து இருக்கிறிர்கள். பலருக்கு புரியுதா என்று பார்போம்!
அவனின் பேச்சை நம்பினால் நாசம் தான்.57 ஆண்டுகளாக நம்மை நாசப்படுத்தி இழிநிலைக்கு ஆளாக்கி நம்முடைய இனத்தை இவ்வளவு கேவலப்படுத்தியது யார்? நம்பிக்கை நம்பிக்கை என்று சொல்லி நட்டாற்றில் விட்டவன்.
நாம் நான் பூமி புத்ராக்கள்